‘நாட்டின் நாடிக்கணிப்பு

‘நாட்டின் நாடிக்கணிப்பு

புதிய தலைமுறை காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘நாட்டின் நாடிக்கணிப்பு’.

இந்தியா.. பாருக்குள்ளே நல்ல நாடு மட்டுமல்ல.. பாருக்குள்ளே மக்கள் தொகையின்படி மிகப்பெரிய மக்களாட்சி நடைபெறும் நாடு. மலர்ந்திருக்கும் இந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவை உலகமே உற்றுப் பார்க்கப் போகிறது. முதன்மை காரணம் நாடாளுமன்ற தேர்தல்.. கடந்த ஐந்து ஆண்டுகால  பாரதிய ஜனதா ஆட்சிக்கு மக்கள் தரப்போகும் மதிப்பு என்ன என்பதை அறிய உலகமே ஆவலோடு இருக்கிறது .

அதிக வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உறவை வளர்த்த பிரதமர் நம்முடைய பிரதமர் என்பதால் அத்தனை நாடுகளும் கவனத்தை குவிக்கும். யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதை வைத்துதான் அந்நாடுகள் பெரும்பாலும் பொருளாதார வர்த்தக உறவுகளை தீர்மானிக்கும் என்பதாலும், அவர்களுக்குத்தான் இந்தியாவின் தேர்தல் முடிவு என்பது கூர்ந்து நோக்கத்தக்கது. 

அதே நிலையில் சொந்த நாட்டினரான நமக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலும் நம் எதிர்கால அடிப்படை வாழ்வை, அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியை, பாதுகாப்பை தீர்மானிக்கவல்லது. எனவே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பற்றியும் அவற்றில் நிலவும் அரசியல் தட்பவெப்ப நிலை பற்றியும் ஒவ்வொரு தேர்தலின்போது நாம் உற்றுப்பார்த்து மனதில் இருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 

அதற்கு ஏதுவாக நாட்டின் நாடிக்கணிப்பு என்ற இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தேர்தல் வரை நாம் நாடு முழுவதும் சுற்ற போகிறோம்.. இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார் வேங்கட பிரகாஷ். .