“வீடு”

“வீடு”
“வீடு”
“வீடு”
“வீடு”
“வீடு”
“வீடு”
“வீடு”

“வீடு”

ஒரு வீடு எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான நிகழ்ச்சியாக இருக்கிறது புதிய தலைமுறையின் “வீடு” நிகழ்ச்சி. வாரம் வாரம் வித்தியாசமான வீடுகளைத்தேடிக் கண்டுபிடித்து வீட்டின் அனைத்துக் கோணங்களையும் வித்தியாசமாக வழங்கி வருகிறது. பாரம்பரிய வீடுகள்,நவீன வீடுகள். சுற்றுச்சூழலைப்பேணும் வீடுகள் என்று பல வடிவங்களிலான வீடுகளை காட்சிப்படுத்துகிறது நிகழ்ச்சி. 

வீடுகள் எப்படி கட்டப்படுகின்றன. எந்தெந்த பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன, அதன் பட்ஜெட் என்ன?  அடித்தளம் முதல் கூரைவரை என்னென்ன மாற்றுப்பொருள்கள் பயன்படுத்தபடுகின்றன போன்ற முழுத் தகவல்களையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஷ்ணு பரத் விளக்கமாக விவரிக்கிறார்.

தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் சென்று வித்தியாசமான வீடுகளை தேடி நேயர்களின் பார்வைக்கு வைக்கும் வீடு நிகழ்ச்சி சனிக்கிழமைதோறும் மாலை 5:30 மணிக்கு நமது புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது.