நட்சத்திர ஜன்னல் சீசன் 2

நட்சத்திர ஜன்னல் சீசன் 2
Natchathira Jannal Season 2

(ஆகஸ்ட் 27 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.00 மணிக்கு)

புதுயுகம் தொலைக்காட்சியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதாலும், மீண்டும் மீண்டும் பார்வையாளர்களிடமிருந்து வெளிப்பட்ட பெருவிருப்பத்தாலும், நட்சத்திர ஜன்னல் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது. சினிமா நட்சத்திரங்களின் தினசரி வாழ்க்கையில் இருக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அதனை மேலும் செழுமைப்படுத்தும் விதமாக, இதனை தொகுத்து வழங்குகிறார் திரைப்பட நடிகை சங்கீதா.

கடந்த முறை ஒளிபரப்பான நட்சத்திர ஜன்னலில் இயக்குனர் பாலா, நடிகர் சிம்பு போன்ற பிரபலங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. தற்போது திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரோடும், மேலும் இடையிடையே பெரிய பிரபலங்கள் பங்கேற்க்கும் இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா விறுவிறுப்பாக நெறிப்படுத்துகிறார்.

பிரபலங்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக ஏற்படும் அழுத்த த்தையும் இறுக்கத்தையும் களைந்து இயல்பாக உரையாடிச்செல்லும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. கலந்துகொள்ளும் பிரபலங்கள் தங்கள் திரையுலக அனுபவங்களையும் பயணங்களையும் எதார்த்தமாகவும் ஒளிவுமறைவின்றியும் உரையாடுவது கூடுதல் சிறப்பாக அமைகிறது. சம்பந்தப்பட்ட பிரபலத்தின் அனுமதியுடன், அவர்களது வாழ்க்கையை நெருங்கிப்பார்க்கும் அனுபவத்தை வழங்குவது நட்சத்திர ஜன்னலின் சிறப்பு.

தொகுப்பாளர் மற்றும் மக்கள் முன்னிலையில், அந்த தருணத்தில் தங்களை மொபைலில் அழைக்கும் நபருடன் பேசுவார்கள் நட்சத்திரங்கள். யார் அழைக்கிறார்கள் என்பதோ, என்ன பேசப்போகிறார்கள் என்பதோ, சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கு மட்டுமல்ல; தொகுப்பாளருக்கும் தெரியாது. இது, கண்டிப்பாக பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது உறுதி.

ஒளிபரப்பாகும் நேரம்: வரும் ஆகஸ்ட் 27 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

Natchathira Jannal Season 2