தமிழக விவசாயிகளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

தமிழக விவசாயிகளை சந்திக்கிறார் ராகுல்காந்தி
Rahul Gandhi to meet protesting farmers in delhi

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் 16-வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளார்.

Rahul Gandhi to meet protesting farmers in delhi