இன்று முதல் ஒரிஜினல் வாகன லைசென்ஸ் இல்லாதவர் மீது கடும் நடவடிக்

இன்று முதல் ஒரிஜினல் வாகன லைசென்ஸ் இல்லாதவர் மீது கடும் நடவடிக்
Raid began on Chennai on Original Driving license

சென்னை: உரிய வாகன லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதால், சாலையில் ஏற்படும் வாகன விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றன.

மோட்டார் வாகன சட்டம் 1988- பிரிவு 3-ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் எந்த நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 1-ந்தேதி) முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இன்று முதல் ஒரிஜினல் வாகன லைசென்ஸ் இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை நகரில் இன்று காலை மழை பெய்ததால் தாமதமாக வாகன ஆய்வு பணி தொடங்கியது. பெரும்பாலானோர் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் எடுத்து வந்து இருந்தனர். வாகன சோதனையில் அவற்றை காண்பித்து ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இந்த வாகன சோதனை தொடரும். வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கட்டாயம் ஒரிஜினல் லைசென்சுகளை கையில் வைத்திருக்க வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Raid began on Chennai on Original Driving license