எஸ்.ஆர்.எம் - REACT '19

எஸ்.ஆர்.எம் - REACT '19

வடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன ECE துறைசார்பில் REACT '19 என்னும் தேசிய அளவிலான பொறியியற் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாடு 29.03.2019 மற்றும் 30.03.2019 அன்று நடைப்பெற்றது. 

சிறப்பு விருந்தினர்களாக முனைவர். சுதிர் ரவிந்திரன், அட்டார்னி அட்லா ( இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்), நிறுவனர் – அல்டாசிட் கிளோபல் மற்றும் முனைவர். தீபா வெங்கிடேஷ், இணை பேராசிரியர், மின்னியல் துறை , இந்திய தொழில் நுட்பக்கழகம் சென்னை. (ஜஜடி மெட்ராஸ்) ஆகியோர் பங்கேற்றனர். 

முனைவர்.சி.கோமதி, துறைத்தலைவர், ECE,SRM IST அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். பின்பு முனைவர். அ. ஷெர்லி எட்வார்ட், உதவி பேராசிரியர், அவர்கள் REACT 19 மாநாடு பற்றி விளக்கினார். அதன் பிறகு முனைவர். க.துரைவேலு, Dean(E&T),SRMIST, வடபழனி அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினர். 

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் சுதிர் ரவிந்திரன், அவர்கள் ஆராய்ச்சி துறையின் முக்கியத்துவங்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவருடைய பேச்சு மாணவர்களிடத்தில் ஆராய்ச்சி மேற்க்கொள்ளும் உற்சாகத்தையும் தூண்டுதலையும் உருவாக்கியது. 

பின்னர் சிறப்புரை ஆற்றிய முனைவர் தீபா வெங்கிடேஷ், அவர்கள் " குறிகை செயலாக்கம்" குறித்து பல்வேறு தரவுகளை பகிர்ந்துக்கொண்டார். மேலும் அவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தொழில் வாய்ப்புகளை பற்றி மிகத்தெளிவாக உரை நிகழ்த்தினார். 

இவ்விழாவில் இசிஇ துறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவில் VLSI, உணரிதொழில்நுட்பம், கம்பியில்லா தொடர்பியல், குறிகை மற்றும் ஓளிப்பட, இலக்கப்படிவ முறை வழி தொகுதி, இலக்க முறைப்படிமச் செயலாக்கம், முறைவழியாக்கம் போன்றபல் வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. இறுதியாக முனைவர் டி. வைஷாலி அவர்கள் நன்றி உரையை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.