ரவுடி ஆனந்தனின் மனைவி கேள்வி

ரவுடி ஆனந்தனின் மனைவி கேள்வி
Rowdy Anandan Wife questions police

சென்னை: போலீஸ் என்கவுண்ட்டருக்கு பலியான ரவுடி ஆனந்தனுக்கு ரஷிதா (வயது 24) என்ற மனைவியும், 4 வயதில் அவினாஷ் மகனும், நிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர், ஆனந்தன் ரஷிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆனந்தன் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான தகவல் கேட்டு ரஷிதா அதிர்ச்சி அடைந்தார், தனது கணவர் ஆனந்தன் ‘என்கவுண்ட்டர்’ செய்யப்பட்டது குறித்து ரஷிதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பவத்தன்று எனது கணவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள் சீனு, ஸ்ரீதர், அரவிந்தன் உள்பட 10 பேரும் அந்த போலீஸ்காரரை (ராஜவேலு) அடித்து உதைத்தனர். 5 பேர் கையில் கத்தி இருந்தது. 5 பேரும் அந்த போலீஸ்காரரை தலையிலேயே குத்தி தாக்கினர். நான் என் கணவரை தடுக்க முயன்றேன். ஆனால் என்னால் முடியவில்லை.

என் வீட்டுக்காரர் மட்டும் தாக்கவில்லை. கத்தி வைத்திருந்த 5 பேரை தவிர மற்றவர்கள் அந்த போலீஸ்காரர் கை, கால்களை பிடித்துக்கொண்டனர். அவரை சரமாரியாக கத்தியால் தாக்கியதை நானே பார்த்தேன். எல்லாரும் இக்காட்சியை கண்டு பயந்து நடுங்கினர்.

ஆனால் இந்த சம்பவத்துக்கு என் கணவரை மட்டும் சுட்டு கொன்றுவிட்டனர். நியாயப்படி பார்த்தால் அந்த 5 பேரையும் சுட்டிருக்கவேண்டும். அதை ஏன் செய்யவில்லை?

இவ்வாறு அவர் கூறினார்.

Rowdy Anandan Wife questions police