இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

 இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

மும்பை: கச்சா எண்ணெய் விலை ஏற்றமும், அந்நிய நேரடி முதலீடு குறைவு ஆகிய காரணத்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74.45-க்கு வர்த்தகம் ஆகிறது.