SRMJEEE (B.Tech), SRMJEEH (UG/PG) நுழைவுத் தேர்வுகள் – 2019

SRMJEEE (B.Tech), SRMJEEH (UG/PG) நுழைவுத் தேர்வுகள் – 2019

SRM கல்விக் குழுமத்தின் SRMJEEE (B.Tech), SRMJEEH (UG/PG) நுழைவுத் தேர்வுகள் – 2019 ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது.

 SRM கல்விக் குழுமத்தில் பொறியியல் மற்றும் பொதுநல அறிவியல் புலங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகள் [SRMJEEE (B.Tech), SRMJEEH (UG/PG)] ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 

இந்திய அளவிலான தரவரிசையின் அடிப்படையில் SRMIST காட்டாங்குளத்தூர், SRM பல்கலைக்கழகம் அரியானா, சோனிபேட் மற்றும் SRM பல்கலைக்கழகம் அமராவதி (ஆந்திரபிரதேசம்) ஆகிய நான்கு வளாகங்களில் சேர்க்கை நடைபெறும்.

இந்தியாவின் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் போன்ற நாடுகளிலிருந்தும் சுமார் 1,40,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். SRMJEEE க்கான நுழைவுத் தேர்வு 128 தேர்வு மையங்களில் இந்தியாவிலும் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. 

மொத்தம் விண்ணப்பங்களில் 55.26% விண்ணப்பங்கள் பின்வரும் 5 மாநிலங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன. ஆந்திரபிரதேசம் (21002), தமிழ்நாடு (18663), உத்திரபிரதேசம் (13215), தெலுங்கானா (12636), மகாராஷ்டிரா (10120). 

SRMJEEE நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் 27.04.2019 அன்று வெளியாகும்.

நுழைவுத் தேர்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு மே மாதம் 03 முதல் 10 ஆம் தேதி வரை (06.05.19 தவிர்த்து) நடைபெறவுள்ள கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். தொலை தூர பயண அலைச்சல், பண விரையம் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில் மாணவர்களின் வசதிக்காக, கலந்தாய்வுகள் ஒரே நேரத்தில் காட்டாங்குளத்தூர், இராமாபுரம், வடபழனி, காசியாபாத், சோனிபேட் மற்றும் அமராவதி ஆகிய ஆறு வளாகங்களில் நடைபெறவுள்ளன. கலந்தாய்வுக்கு அழைக்கப்பெற்ற எந்த மாணவரும் எந்த வளாகத்திற்கு வேண்டுமானாலும் அவர்களுக்குக் குறிப்பிடப்பட்ட தேதியில் சென்று தாம் விரும்பும் பல்கலைக்கழகம் (SRMIST, SRM – Haryana, SRM – AP), வளாகம், துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை தரவரிசை, கலந்தாய்வு, சேர்க்கைக்கான இடம் உள்ளிட்டவற்றைப் பொறுத்து அமையும்.

SRMJEEEக்கான நுழைவுத் தேர்வில் முதல் 100 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து முழு விலக்கு “SRM நிறுவனர் கல்வி உதவித் தொகை” என்ற பெயரில் வழங்கப்படும். மேலும் விளையாட்டு, சமூகப் பொருளாதாரம், மாற்றுத் திறனாளிகள், குறைந்த வருவாய் உடையோர் முதலிய பல்வேறு பிரிவுகளின் கீழ் உதவித் தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.srmuniv.ac.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.