SRM மருத்துவக்கல்லூரி - Bentall செயல்முறை

SRM மருத்துவக்கல்லூரி - Bentall செயல்முறை

SRM மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில்

Bentall செயல்முறையில் அரிய இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

* Bentall செயல்முறை அறுவை சிகிச்சை என்பது ஆக்சிஜன் மற்றும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு செல்லும் இதயவால்வில் ஏற்படும் சிதைவுக்குச் செய்யப்படும் சிகிச்சையாகும்.

* உலகம் முழுவதும் 10000 நபர்களில்  2 முதல்3 நபர்களுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

* முறையான சிகிச்சை மற்றும் சரியான நேரத்தில் நோயைக் கண்டறிவதின் மூலம் நோயாளியின் உயிரைக் காப்பற்ற முடியும்.

சென்னை: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 54 வயதுடைய முதியவர் ஒருவர் கடுமையான நெஞ்சுவலி மற்றும் மூச்சுவிடுதலில் சிக்கல் போன்ற காரணங்களுக்குகாக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு Type-1 ஏரோடிக்கு வால்வு சிதைவு நோய் இருப்பதைக் கண்டறிந்தனர். அடுத்தக்கட்ட சிகிச்சைக்குக் காட்டங்குளத்தூரில் அமைந்துள்ள SRM  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

SRM மருத்துவமனையின் மருத்துவக் குழு அவரை ஒரு முழுமையான பரிசோதனைக்குட்படுத்தி அவருக்கு Bentall செயல்முறையில் செயற்கை வால்வு பொருத்தும் அறுவைசிகிச்சை மேற்கொள்ள முடிவுசெய்தது. SRM மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி அவர்களின் தலைமையிலான மருத்துவக் குழு 10 முதல் 12 மணி நேரம் அளவிலான கால அளவை எடுத்துக்கொண்டு இச்சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்தது.

இதைத் தொடர்ந்து பேசிய மருத்துவர் ஸ்ரீநிவாச ரெட்டி “ இந்தியாவில் மிகச் சில அறுவை சிகிச்சையாளர்களே இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பெரும்பாலான மருத்துவ மையங்களில் இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கான உள் கட்டமைப்பு வசதி மற்றும் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் கைதேர்ந்த மருத்துவ நிபுணர்குழு இல்லை. மேலும், நோயாளிக்கு ஏரோடிக் இதய வால்வு சிதைவு நோய்தான் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறியாமலே வழக்கமான இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதால் நோயாளியின் இறப்பு சதவிகிதம் அதிகரிக்கிறது என்றார்.  இந்த நோய் மிகவும் அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தானது. உயர் இரத்த அழுத்தம், உடல் மற்றும் மனத்தில்ஏற்படும் அழுத்தம் மற்றும் முறையற்ற சிகிச்சைகளே இந்நோய் வளர்வதற்குக் காரணியாகின்றன.