சர்வதேச இளைஞர் விழா - எஸ்.ஆர்.எம் வீரர்கள் சாதனை

சர்வதேச இளைஞர் விழா - எஸ்.ஆர்.எம் வீரர்கள் சாதனை
SRM Shines at CIYF 2018

இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பு (YDC) மற்றும் இந்திய அரசின் திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகம், இளைஞர் மேம்பாட்டுத் துறை மற்றும் விளையாட்டு அமைச்சகம், நகர மேம்பாட்டு அமைச்சகம்  ஆகியவற்றின் உதவியுடன் உலகின் மிகப்பெரிய இளைஞர் மாநாட்டு சென்னையில் நடைபெற்றது. சென்னை சர்வதேச இளைஞர் மாநாடு (CIYF)  செப்டம்பர் 1முதல் 16 வரை  சென்னையில் நடந்தது.

சர்வதேச இளைஞர் விழா (CIYF) இரண்டாவது பதிப்பு சென்னை முழுவதிலும் பல்வேறு இடங்களில் நடைப்பெற்றது. ஞாயிற்றுக் கிழமை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.சி.விஜயா பாஸ்கர், உயர் கல்வித் துறை  அமைச்சர் அன்பழகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஶ்ரீ பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

250 க்கும் அதிகமான நிகழ்வுகளுடன், 16-நாட்கள் இந்த சர்வதேச இளைஞர் விழா நடைபெற்றது. பல்வேறு  போட்டிகள்  மற்றும் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுக்கள், தற்காப்பு கலைகள், கண்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் அரங்குகள் ஆகியவற்றில் பல்வேறு இளைஞர்கள் கலந்துகொண்டு  திறமைகளை வெளிப்படுத்தினார் . இந் நிகழ்வில் 5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். எஸ்ஆர்எம்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி  நிறுவனம் இந்த சர்வதேச இளைஞர் விழாவில்  ஒட்டுமொத்த  வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு சுழற்கோப்பையை வென்றனர். அதிக  எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்ற மாணவர்களை  SRM நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் வாழத்தினார். பின்னர் பல்கலைக்கழக தலைவர் டாக்டர் சத்திய நாராயணன் மற்றும் துணை வேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SRM Shines at CIYF 2018