KRATORQ"18

KRATORQ"18

இ – வ : முனைவர்.எஸ். கார்த்திகேயன், துறைத்தலைவர், இயந்திரவியல் துறை, SRMIST, முனைவர்.க.துரைவேலு, Dean(E&T), SRMIST, வடபழனி, திரு. சங்கர் ஜி. எஸ். , மேலாளர் - கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பிரிவு - கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட், திரு. பி. வேங்கடேசன், தலைவர் - ஹிந்துஜா பவுண்ட்ரிஸ் – எண்ணூர்,   திரு. G. செகர்,

வடபழனியில் உள்ள SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இயந்திரவியல் துறை, ஆண்டு தோறும் KRATORQ என்கின்ற தேசிய அளவிலான கருத்தரங்கை நடத்துகிறது. இந்த ஆண்டு  செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. சங்கர் ஜி. எஸ். , மேலாளர் - கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பிரிவு - கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் கௌரவ விருந்தினராக திரு. பி. வேங்கடேசன், தலைவர் - ஹிந்துஜா பவுண்ட்ரிஸ் - எண்ணூர், வருகை தந்திருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் கருத்தரங்கு துவங்கப்பட்டது. முனைவர்.எஸ். கார்த்திகேயன், துறைத்தலைவர், இயந்திரவியல் துறை, SRMISTஅவர்கள் வரவேற்புரையை வழங்கினார். விழாவை   முனைவர்.க.துரைவேலு,Dean(E&T),SRMIST, வடபழனி அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கௌரவ விருந்தினர் திரு. பி. வேங்கடேசன் அவர்கள் INDUSTRY 4.0 மற்றும் Foundry தொழில் நுட்பத்தை பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் திரு. சங்கர் ஜி. எஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.அவருடைய பேச்சு மாணவர்களிடத்தில் உற்சாகத்தையும் தூண்டுதலையும் உருவாக்கியது. அவர் வளர்ந்து வரும் இயந்திரவியல் தொழில்நுட்பத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், 3D பிரின்டிங் , பிக் டேட்டா , NPTEL , செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில் வாய்ப்புகளை பற்றி மிகத்தெளிவாக உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பபட்டன. பல்வேறு கல்லூரிகளிலிருந்து மானவர்கள் பங்கேற்று ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன . மாலையில் தேசிய கீதம் இசைத்து விழா இனிதுடன் நிறைவு பெற்றது.