எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்
SRM University Sports Coaching valedictory function

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து SRM பல்கலைகழகத்தில் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான ஆறு வார பட்டய பயிற்சி முடித்த 123 பல்துறை விளையாட்டு வீரர்களுக்கு காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் நஜ்மல்ஹோடா சான்றிதழ்களை வழங்கினார்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து SRM பல்கலைகழகம் விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு குறுகிய கால பட்டய பயிற்சி வகுப்புகளை கடந்த 4 வருடங்களாக நடத்தி வருகிறது. தமிழகத்திலேயே இந்த பல்கலைகழகத்தில் தான் இந்த பட்டய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் மாநில அளவில் விளையாடிய வீரர்கள், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மேலும் தங்களின் விளையாட்டு நுணுக்கங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதில் இந்த வருடம் தமிழகமட்டுமில்லாது பிற மாநிலத்திவர்கள் என 23 பெண்கள் உள்ளிட்ட 123 பேர் அனுமதிக்கபட்டு காலை விளையாட்டு பயிற்சி அதன்பின் அறிவியல், மனஅழுத்தம், விளையாட்டு நுணுக்கங்கள் யோகா ஆகியவை கற்று தரபட்டன.

இன்று இதன் பயிற்சி நிறைவு விழா பல்கலைகழக வளாகத்திலுள்ள டாக்டர் டி.பி.கணேசன் அரங்கத்தில் SRM பல்கலை கழக மானுட அறிவியல் புலத்துறை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக காஞ்சி சரக காவல்துறை துணைத்தலைவர் நஜ்மல்ஹோடா பங்கேற்று பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்தினார்.

இவ்விழாவில் SRM பல்கலை கழக விளையாட்டு துறை இயக்குனர் பேராசிரியர். வைத்தியநாதன் மற்றும் பல்துறை விளையாட்டு பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

SRM University Sports Coaching valedictory function