எஸ்.ஆர்.எம் RCICD’19 ஆராய்ச்சி மாநாடு

எஸ்.ஆர்.எம்  RCICD’19 ஆராய்ச்சி மாநாடு

வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கணிப்பொறியியல் துறை RCICD’19 என்கிற ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது. ஏப்ரல் 5-ஆம் தேதி 2019, நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.மனோகரன் இருளான்டி, குளோபல் டைரக்டர், ஒப்பரேஷன்ஸ், HCL நிறுவனம், முனைவர் கார்த்திகேயன் வையாபுரி , விஞ்ஞானி (R&D), TCS நிறுவனம் மற்றும் திருமதி ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன் , தயாரிப்பு மேலாளர் மற்றும் நற்செய்தியாளர், Zoho நிறுவனம், ஆகியோர் பங்கேற்றனர் .முனைவர். ப. அமுதா பேராசிரியர் மற்றும் தலைவர், கணிப்பொறியியல் துறை, SRMIST, காட்டாங்குளத்தூர், முனைவர். ம. கலைச்செல்வி கீதா இணை பேராசிரியர் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் முனைவர். விஜயகுமார் டீன் விஐடி, சென்னை ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்..பிரசன்னா தேவி, தலைவர், கணிப்பொறியியல் துறை, அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். அதன்பிறகு முனைவர்.க. துரைவேலு, Dean(E&T),SRMIST, அவர்கள் விருந்தினர்களுக்குப் பூச்செண்டு மற்றும் நினைவுப்பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார். 

திரு.மனோகரன் இருளான்டி அவர்கள் பொருட்களின் இணையத்தின் மேம்பாடுகள் பற்றியும், எதிர்காலத்தில் 5ஜியின் பயன்பாட்டைப் பற்றியும் தலைமையுரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, முனைவர், திரு கார்த்திகேயன் வையாபுரி அவர்கள் மின்னணு தேனீ, சில்லறை வர்த்தக மற்றும் விமானத்துறையில், பொருட்களின் இணையத்தின் பயன்பாட்டைப் பற்றி தொடக்க உரையை வழங்கினார். 

இந்த ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருதரங்கப்புத்தகம் மேடையிலுள்ள பிரமுகர்களால் வெளியிடப்பட்டது. திருமதி.ராஜலக்ஷ்மி ஸ்ரீனிவாசன், அவர்களது தலைமையுரையில், புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு உதவிக்குறிப்புகளை வழங்கி ஊக்குவித்தார். இறுதியாக முனைவர். ஜே.அருண் நேரு, உதவி பேராசிரியர் அவர்கள் நன்றி உரையை வழங்கி விழாவை நிறைவு செய்தார்.