மினிபஸ் சக்கரத்தில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவி பலி

மினிபஸ் சக்கரத்தில் சிக்கி 8-ம் வகுப்பு மாணவி பலி

சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூர் குருசாமி நகரைச் சேர்ந்தவர் அம்ஜத்கான். இவருடைய மகள் ஆலியா(வயது 13). இவர், தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.டி. பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு முன்னால் குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ்சை முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் திடீர் என பிரேக் பிடித்தார். இதில் தந்தை-மகள் இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் மினி பஸ்சின் பின்பக்க சக்கரம் மாணவி ஆலியாவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் மாணவி ஆலியா தந்தை கண்முன்னே பரிதாபமாக இறந்தார், அம்ஜத்கான் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார், மினி பஸ் டிரைவர் ஆறுமுகம்(50) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.