இந்திய சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுலாத்துரை புதிய திட்டம்

இந்திய சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுலாத்துரை புதிய திட்டம்

மும்பை, பிப்ரவரி 2019: தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை இந்தியாவில் அதன் மிகப் பெரிய பயண வணிக முயற்சியான- வருடாந்திர ரோட்ஷோ (சாலை நிகழ்ச்சியின்) 16வது பதிப்புடன் தொடங்கியது. இந்த ரோட்ஷோ, தற்போதைய ஆண்டில் தென் ஆப்பிரிக்காவிற்கு 100,000 இந்திய சுற்றுலா பயணிகள் இலக்கைத் தாண்டுவதற்கு, இந்தியாவில் வலுவான சாத்தியமான நுகர்வோர் தேவையை மூலதனமாக்க எண்ணுகிறது. இந்திய பயணிகளின் வளர்ந்து வரும் தேவைகளைக் கண்டறிவது மற்றும் வணிக பார்ட்னர்களை (பங்குதாரர்களை) செயல்பட வைப்பதற்கான தொடர் முயற்சிகளில், 6 புதிய சிறு நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய 56-உறுப்பினர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க வணிக குழு, சுற்றுலா இடங்கள் மற்றும் பொருள் சலுகைகளை விரிவுப்படுத்துவது குறித்த சுற்றுலா வாரியத்தின் அழுத்தத்தை திரும்பச் சொன்னது. அனுபவங்களுடன் கூடுதலாக, தங்குமிட நிறுவனங்களிலிருந்து வந்த பிரதிநிதிகள், சுற்றுலா இட நிர்வாக நிறுவனங்கள், விமான சேவைகள், சுற்றுலா அமைப்புகளின் பிரதிநிதிகள் அவர்களுடைய பொருட்களை காட்சிப்படுத்துகிறார்கள் மற்றும் இந்திய பயண மற்றும் வணிக பார்ட்னர்களை (பங்குதாரர்களை) சந்திக்கின்றனர். 

ஜனவரி முதல் செப்டம்பர் 2018 வரை உள்ள காலத்திற்கு, ஒட்டுமொத்த இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மும்பை 45% பங்களிக்கிறது, அதே சமயத்தில் டெல்லி 17.4%, சென்னை 7.7% மற்றும் கொல்கத்தா 1.6% பங்களிக்கிறது. 1300 க்கு மேற்பட்ட இந்திய பயண ஏஜென்டுகள், இந்திய பயணிகளின் எப்போதுமே மாறி வரும் தேவைகளை சிறப்பாக புரிந்து கொண்டு பூர்த்தி செய்வதற்கு தொடர்பு கொள்ளக்கூடிய ரோட்ஷோ நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

“எங்களுடைய பிராண்டு ஆய்வு, தென் ஆப்பிரிக்கா அளிக்கும் நினைவுகள் மற்றும் பணத்திற்கான மதிப்பு காரணமாக இந்திய பயணிகள் ஒரு விடுமுறை இடமாக தென் ஆப்பிரிக்காவை விரும்புவதைக் காண்பிக்கிறது. பரந்த புவியியல் பகுதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலமாக இந்த தேவையை நாங்கள் தொடர்ந்து தூண்டுவோம், இது புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்த எங்களை அனுமதிக்கும். எங்களுடைய நிகழ்ச்சிகள் மற்றும் பொருள் சலுகைகளை, இந்தியாவிற்குள் உள்ள எங்கள் இலக்கப் பகுதிகள் ஒவ்வொன்றிலிருந்தும் தனித்தன்மையான தேவைகளுக்கு பொருந்துவதற்கு எற்ப வடிவமைப்பதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று கூறினார் நெலிசா என்கனி, ஹப் தலைவர், எம் இ ஐ எஸ் இ ஏ, தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை.

கேப் டவுன், ஜோஹனஸ்பர்க் மற்றும் டர்பன் போன்ற சின்னமாகத் திகழும் நகரங்கள் வசீகரிக்கும் பகுதிகளாக இருக்கையில், தற்போதைய வருடத்தில் சுற்றுலா வாரியம் ஸ்டெல்லன்போஷ், ஜார்ஜ், சைமன்ஸ் டவுன் , அவுடஷூர்ன், க்னைஸ்னா, ப்ளெட்டென்பெர்க் பே , போர்ட் எலிசாபாத், மற்றும் கிழக்கு லண்டன் போன்ற புத்தம் புதிய பகுதிகளை சுற்றி சுற்றுலா பகுதிகளாக ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை சுற்றுலா வாரியம் வளர்த்து வருகிறது. 2018ல், எம்புலங்கா, நார்தர்ன் கேப், மற்றும் ஃப்ரீ ஸ்டேட் போன்ற புதிய மற்றும் வழக்கத்திற்கு மாறான இடங்களில் தேவை மற்றும் பயணம் அதிகரித்திருந்திருந்தது.

புதிய அனுபவங்களை அறிமுகப்படுத்துவதற்கான தேவைக்கு பதிலளிக்கும் வகையில், சுற்றுலா வாரியம் பலதரப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அனுபவங்களை ஊக்குவிப்பதன் மீது பிரத்யேக முக்கியத்துவத்தை அளிக்கும். அதிகபட்ச சாகச நடவடிக்கைகளை தென் ஆப்பிரிக்கர்கள் தவிர அதிகபட்சமாக இந்திய பயணிகளே பயன்படுத்துகிறார்கள் என்பதால், லாங் டாம் டோபோகன் ரைடுகள், ஃபாட்பைக் டூர்கள், மவுன்டன் போர்டிங் மற்றும் வாக்கிங் சஃபாரிகள் போன்ற வழக்கத்திற்கு-மாறான நடவடிக்கைகள் உட்பட அப்சீலிங் மற்றும் பாராக்ளைடிங் போன்ற பிரபலமான நடவடிக்கைகளுடன் தென் ஆப்பிரிக்கா அளிக்கும் 3000+ சாகச நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதன் மீது வாரியம் ஆழந்த கவனம் செலுத்தும்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே உள்ள இரு-வழி சுற்றுலாத் துறையை உருவாக்குவது, பலப்படுத்துவது மற்றும் நிலைப்படுத்துவதுடன், இந்த பிராண்டு அந்த இடங்களின் யு எஸ் பி-ஐ (கவரும் அம்சத்தை) மேம்படுத்துவதற்கான புதிய மற்றும் கற்பனைத் திறன் மிக்க வழிகளையும் தேடுகிறது.” எங்களுடைய மதிப்புவாய்ந்த திட்டங்களை மேம்படுத்துவதற்கு இணையான ஆப்பிரிக்க தேசங்களுடனான எங்களுடைய ஒருங்கிணைப்புகளை உகந்த நிலைகளுக்கு ஆக்குவதில் நாங்கள் தீவிர ஆர்வம் கொண்டுள்ளோம். குறிப்பாக, நாங்கள் மௌரீஷியஸ் மற்றும் செய்செல்சுடனான கூட்டுகளை ஆய்வு செய்து வருகிறோம், இது நாங்கள் இரண்டு இடங்களையும் ஊக்குவிப்பதை இயன்றதாக்கும், “என்று கூறினார் நெலிஸ்வா என்கனி

வனவிலங்கு, சாகசம்  மற்றும் கலாச்சார சலுகைகளில் அதன் நிலையை பலப்படுத்துகையில் , இந்த இடங்கள் நிலைபெற்றுவரும் திருமண மார்கெட்டையும் இலக்காக கொள்ளும் , தென் ஆப்பிரிக்க சுற்றுலாத் துறை இதற்கான விசாரனைகள் அதிகரிப்பதைப் பார்த்திருக்கிறது. இதனைச் சாதிப்பதற்கு, இந்த இடங்கள் வணிக பார்ட்னர்களுக்கு (பங்குதாரர்களுக்கு) தென் ஆப்பிரிக்காவில் உள்ள பலதரப்பட்ட உலகத் -தரம் வாய்ந்த வசதிகள், தனித்தன்மையான வசீகரங்கள், மறுக்க முடியாத மற்றும் பணத்திற்கான மதிப்பு அனுபவங்கள் பற்றிய கல்வி /விழிப்புணர்வு அளிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பிராண்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய போது, தென் ஆப்பிரிக்க சுற்றுலாத் துறை, ஹப் தலைவர், நெலிஸ்வா என்கானி இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் போது சொன்னார், “4 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகளை உள்ளடக்கிய எங்களுடைய 5-ல்-5 இலக்கை சாதிப்பதில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கையில், இப்போது நாங்கள் அந்த பகுதிகளுக்குள் எங்களுடைய மார்கெட்டிங் (விற்பனை) முயற்சியை இரட்டையாக்குவதில் மற்றும் அந்த இடங்களை விளம்பரப்படுத்துவதற்கான ஆதரவை மேம்படுத்துவதை எதிர்பார்க்கிறோம். எங்களுடைய வனவிலங்கு காட்சி இடங்களுகாக நாங்கள் ஏற்கனவே பரவலாக அறியப்பட்டிருக்கையில், 2019 க்க்கான 5-இலக்க திட்டம், இந்திய மார்கெட்டிற்கு திருமணம் செய்து கொள்வதற்கான ஒரு இடமாக விருப்பத்தை வளர்க்கையில் உலகின் சாகச தலை நகரமாக எங்களை நிலைப்படுத்திக் கொள்வதில் மற்றும் பலப்படுத்திக் கொள்வதற்கு குறிப்பிட்ட முயற்சிகள் மேற்கொள்கிறோம் மற்றும் பங்குதாரர்கள் (பார்ட்னர்களையும்) பயன்படுத்தி வருகிறோம்.
 
தென் ஆப்பிரிக்க சுற்றுலாத்துறை மும்பையில் உள்ள தென் ஆப்பிரிக்க தூதரகத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறது. தூதரக அதிகாரி மாரோபீன் ராமாகோபா சொன்னார், “வீசா செயல்முறைகளை எளிமையாக்குவதற்கான ஒரு முயற்சியில், தென் ஆப்பிரிக்க தூதரகம் தென் ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. விரும்பப்படும் பார்ட்னர்களிடமிருந்து (பங்குதாரர்களிடமிருந்து) வரும் வீசா விண்ணப்பங்களை விரைவாக - கண்காணிப்பதை அனுமதிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ராவல் ஏஜென்டுகள் மற்றும் டூர் ஆபரேட்டர்களை அங்கீகரிப்பதற்கு நாங்கள் கூட்டாக பணியாற்றி வருகிறோம்.”

இந்த வருட ரோட்ஷோ (சாலை நிகழ்ச்சி) மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தாவைக் கவர் செய்தது, இது விளக்கமான மார்கெட் கருத்துக்களின் ஒரு பரிமாற்றத்தை அனுமதிப்பதற்கு தொடர்புகளுக்கான வழியை உருவாக்கியது, அதனால் இரண்டு பார்ட்னர்களும் பணியாற்றுவதை மற்றும் சிறப்பாக சேவை அளிப்பதை அனுமதிக்கிறது. மற்ற மார்கெட்டுகளுடன் ஒப்பிடும் போது சாகச நடவடிக்கைகளுக்காக வழக்கத்திற்கு மாறான அதிகமான ஒரு தேவை, ஐந்து-பெரிய வனவிலங்கு காட்சிக்கான இடங்கள், தனியார் சமையலறைகள் மற்றும் இந்திய செஃப்களுக்கான கோரிக்கைகள் மற்றும் சைவ உணவுகான கோரிக்கைகள் தென் ஆப்பிரிக்க சப்ளையர்கள் கவனித்திருக்கும் முக்கிய நடத்தைகளில் சில.

நவம்பர் 2018 ல் 86, 405 பேர் வந்திருந்ததுடன், பயண இலக்கு வாரியம் இந்திய மார்கெட்டிற்கான சாதகமான கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டது, ஜூன் 2018 வரை தென் ஆப்ரிகாவில் இந்திய பயணிகள் செலவழித்த மொத்த தொகை 20% அதிகரித்திருந்தது மற்றும் தங்கியிருந்த சராசரியான காலம் (+7.7%) மற்றும் மொத்த படுக்கை இரவுகள் (+4%) அதிகரித்திருந்தது.