பஸ் ஸ்டிரைக்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பஸ் ஸ்டிரைக்: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Tamil Nadu 5th day bus strike Madras highcourt orders Tamil Nadu government

சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

Tamil Nadu 5th day bus strike Madras highcourt orders Tamil Nadu government