பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2019-20 முக்கிய விவரங்கள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2019-20 முக்கிய விவரங்கள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கூடியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* நாள் ஒன்றுக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

* ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும்.

* முத்ரா யோஜனா திட்டத்தில் பதிவு செய்த பெண்களில், 70 சதவீதம் பேர் சுய தொழில் தொடங்கி உள்ளனர்.

* முத்ரா யோஜனா திட்டத்தில் 7 கோடி பேருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

* நிரந்தரமாக ஓரிடத்தில் தங்காத மக்களுக்கு சமூக நலத்துறை கீழ் தனி நலவாரியம் அமைக்கப்படும்.

* வருங்கால வைப்பு நிதி ஆணைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பணி கொடை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* மீன் வர்த்தகம் கடந்தாண்டு 7 சதவீதம் அதிகரித்துள்ளது; இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது

* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் நவீனமயமாக்கப்படும். 

* ரெயில்வே திட்டங்களுக்கான முதலீடு அதிகரிப்பு. அகல ரெயில் பாதைகளில் ஆளில்லா ரெயில்வே கிராசிங் இல்லாத நிலையை எட்டியுள்ளோம்.

ரெயில்வே துறையின் வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியிலிருந்து 12 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதுவரை எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வருவாய் அதிகரித்து இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் ரெயில்வே திட்டங்களுக்கான முதலீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரெயில்வே துறைக்கு மொத்தமாக 64,587 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

* வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3.79 கோடியில் இருந்து 6.68 கோடியாக அதிகரித்து உள்ளது. 99.54 சதவீதம் பேர் வருமான வரி செலுத்தியுள்ளனர். 

* வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடியில் இருந்து 12 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. 

* நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வருமான வரி விலக்கில் எந்த மாற்றமும் அந்தத் துறை அறிவிப்பின் போது அறிவிக்கப்படவில்லை. பின்னர்  உறுப்பினர்களின் கைத்தட்டலுடன்  இடைக்கால பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது என பியூஸ் கோயல் அறிவித்தார்.

* வருமான வரி விலக்கு உயர்வால் 3 கோடி பேர் பயன்பெறுவர். நிலையான தள்ளுபடி 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.

* 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.