தமிழக முதலமைச்சரிடம் விஷால், பிரகாஷ் ராஜ் மனு

தமிழக முதலமைச்சரிடம் விஷால், பிரகாஷ் ராஜ் மனு
VIshal team meets Tamil Nadu CM Palaniswami

சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று(12-05-17) தலைமை செயலகத்தில், அன்மையில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்ட, அச்சங்கத்தின் தலைவர் விஷால், செயலாளர் எஸ்.கதிரேசன் மற்றும் ஞானவேல் ராஜா, பொருளாளர் எஸ்.ஆர். பிரபு, துணைத் தலைவர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், செயல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, சிறிய திரையரங்குகள் உருவாக்க அனுமதி, திருட்டு விசிடி ஒழிப்பு, பேருந்துகள்/தனியார் கேபிள் டிவிகளில் உரிமம் பெறாத திரைப்படங்களை ஒளிபரப்புவதை தடை செய்தல் போன்ற கோரிக்கைகளை அடங்கிய மனுவினை அளித்தார்கள்.

இந்த சந்திப்பின் போது பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன், அவர்கள் உடனிருந்தார்.

VIshal team meets Tamil Nadu CM Palaniswami