கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்

கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்
Various changes in the educational section will be brought

சென்னை: நேற்று வெளிவந்த +2 தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 92.1 விகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

இந்த ஆண்டு தமிழகத்தின் +2 தேர்வில் 92.1 சதவீத தேர்ச்சி, என்பது தமிழக வரலாற்றில் முதன் முறையாகும். இதன்மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அதிகமாக பெற்று இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வர இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கல்வித்துறையில் யார் எந்த கருத்துகளை சொன்னாலும் அதை ஏற்று பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்கும் இந்த அரசு தயாராக உள்ளது. இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு வருகின்ற கல்வித்துறை மானியத்தில் பல்வேறு திட்டங்களை அறிவிக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Various changes in the educational section will be brought