அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வேலம்மாள் பள்ளி சாதனை

அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் வேலம்மாள் பள்ளி சாதனை
Velammal Basket Ball Team Clinches Raja Raja Cholan Trophy

தஞ்சையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த மாதம் 26 தேதி முதல் தொடங்கியது தஞ்சை மாமன்னன் ராஜ ராஜ சோழன் ஊரக கூடைப்பந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் மாணவர் இறுதிப் போட்டியில் சென்னை வேலம்மாள் பள்ளி அணி 77-76 என்ற புள்ளி கணக்கில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பள்ளி அணியை தோற்கடித்து கோப்பையினை வென்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டியில் முதலிடம் பிடித்த வேலம்மாள் பள்ளி அணியினருக்கு ரூ.27 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

Velammal Basket Ball Team Clinches Raja Raja Cholan Trophy