முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்றனர்

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்கு களப்பயணம் சென்றனர்

முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் நிடுநிலைப் பள்ளி மாணவர்கள் டிசம்பர் 1-ந் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்திற்குக் களப்பயணம் சென்றனர். செய்முறைக் கற்றலை விரிவுபடுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயணம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. செய்தித்தாள் அச்சடித்தலின் பல்வேறு படிநிலையையும் மாணவர்களுக்குச் செய்முறையின் மூலம் விளக்கிக் காண்பிக்கப்பட்டது.

அச்சகத்தின் பொறுப்பாளர்களிடம் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். இம்முயற்சி மாணவர்களுக்குச் செய்தித்தாள் அச்சுப்பதிப்பின் முழுவிபரங்களையும் எடுத்துரைப்பதாக அமைந்ததுடன் மாணவர் நினைவை விட்டு அகலாத ஒரு இனிய தகவல் பயணமாக அமைந்தது.