வேந்தர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

வேந்தர் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

* வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வேந்தர் தொலைக்காட்சியின் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மன நிறைவும், மகிழ்ச்சியும் நிறைந்தது காதல் திருமணத்திலா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலா  என்கிற பட்டிமன்றம் ஒளிபரப்பாக இருக்கிறது. நகைச்சுவையாகவும், கலகலப்பாகவும்....சிரிக்கவும் சிந்திக்கவும் நடைபெறும் சிறப்பு பட்டிமன்றம்  ஏப்ரல் 14 காலை 9:00 மணிக்கு சித்திரை திருநாளன்று ஒளிபரப்பாக இருக்கிறது. 

* வாசுதேவநல்லூரில் கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கு பெற்ற பண்டைய தமிழ் கலாச்சார கலைகளான மயிலாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பறையாட்டம் போன்ற பாரம்பரிய மிக்க கலைகளை பறைசாற்றும் விதமாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா நிகழ்ச்சி ஏப்ரல் 14 காலை 10:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .