குமுதா ஹாப்பி

குமுதா ஹாப்பி
Kumudha Happy

வேந்தர் தொலைக்காட்சியில் "குமுதா ஹாப்பி" என்னும் புதுமை கலந்த நகைச்சுவை நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிறு பிற்பகல் 3:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சி முற்றிலும் புதுமையான நகைச்சுவை கலந்த மாறுப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த முயலும்போது, அந்த பெண் ஒரு நிபந்தனை போடுகிறாள். தான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும், இல்லையென்றால் உன் முயற்சி வீணாகிடும் என்கிறாள்.

அந்த இளைஞன் ஒவ்வொரு முறையும் தோற்று அவளிடம் அடி வாங்கும் இந்த நிகழ்வுகளை நகைச்சுவையோடு காட்சிப்படுத்தி, தமிழ் திரைப்படங்களில் வரும் காட்சிகளோடு இணைத்து சிறிய நாடக வடிவில் கலந்து கலகலப்பான முறையில் கொடுக்கும் நிகழ்ச்சிதான் "குமுதா ஹாப்பி". இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிறு பிற்பகல் 3:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Kumudha Happy