துள்ளுவதோ இளமை

துள்ளுவதோ இளமை
Thulluvatho IIamai

(வாரம்தோறும் ஞாயிறு பகல் 12:00 மணிக்கு)

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "துள்ளுவதோ இளமை" ஒரு காமெடி மசாலா நிகழ்ச்சி!... என்னென்ன அருமையான விசயங்கள் இதில் உள்ளடக்கியது என்றால், பிரபலமான தமிழ் திரைப்படங்களின் வசனத்தை அச்சு பிசகாமல் தமிழில் பேசி கல்லூரி மாணவர்கள் நடித்து காண்பிப்பது மட்டுமில்லாமல், பிரபலமானவர்களைப் போன்று மிமிக்கிரி செய்வது, பாட்டுப்பாடி நடிப்பது, சினிமா நடிகர், நடிகைகளைப் போன்று நடனமாடுவது, தமிழ் சினிமா வசனங்களை அப்படியே ஆங்கிலத்தில் பேசுவது, நாம் சொல்லும் வார்த்தைகளை நடிப்பின் மூலம் எதிரில் இருப்பவருக்கு நடித்து புரியவைப்பது என பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் உங்களை சிரிக்கவைப்பது மட்டுமில்லாமல் மாணவர்களின் திறமைக்கு நல்ல ஒரு தீனியாகவும், நகைச்சுவை உணர்வை தூண்டும் நிகழ்ச்சியாகவும், பார்வையாளர்களை தங்கள் கவலையை மறந்து சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் சிறகடிக்க வைக்கும் இந்நிகழ்ச்சி வேந்தர் தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஞாயிறு பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரீத்தி.

Thulluvatho IIamai