“ஹலோ டாக்டர்”

“ஹலோ டாக்டர்”

வேந்தர் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11:00 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் மருத்துவ நிகழ்ச்சி தான் ஹலோ டாக்டர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு தொலைபேசியில் நேயர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கிறார்கள். விரிவான மருத்துவ ஆலோசனைகளும் வழங்குகிறார்கள்.

குறிப்பாக குழந்தை நலம், மகப்பேறு, இருதய நோய், முகசீரமைப்பு , சர்க்கரை வியாதி,  பல் பிரச்சினைகள், நரம்பியல் மற்றும் சிறுநீரக நோய்கள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கியதில் ஏராளமான நேயர்கள் பலன் அடைந்துள்ளனர்.

இந்த மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிக்கு நேயர்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியை வேந்தர் டிவி சார்பில் பிரீதா மற்றும் சுமித்ரா தொகுத்து வழங்குகிறார்கள்.