அழகான ஆபத்து

அழகான ஆபத்து

வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் த்ரில் மற்றும் மர்மங்கள் நிறைந்த தொடர் தான் ‘அழகான ஆபத்து’.. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

கதையின் நாயகி அபர்ணா தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்பவன். அவளது அம்மா அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார். ஆனால் தன்னைப் பெண் பார்க்க வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையையும் தட்டிக்கழிக்கும் அபர்ணா, அவள் தந்தையின் வழியில் வந்த பல கோடி ரூபாய் சொத்துக்களை தான் மட்டுமே அடைய வேண்டும் என்று திட்டம் போடுகிறாள்.

இதற்காக தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிக்கும்படி தன்னை பெண் பார்க்க வந்த தினேஷிடம் சொல்கிறாள்.. அவளுடன் சேர்த்து அவள் சொத்துக்களையும் அடைய தினேஷ் திட்டம் போடுகிறான். இந்த உண்மை தெரிந்து அபர்ணாவை அடைய நினைப்பவர்கள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் காணாமல் போகின்றனர்.

நடந்தது என்ன என விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி தான், தன் தந்தை என அபர்ணாவுக்கு தெரிய வருகிறது. ஆனால் அபர்ணாவை காப்பாற்ற முயலும் அவரும் மர்மமான முறையில் இருக்கிறார்.. தன்னை சுற்றி பின்னப்பட்ட மாயவலையில் இருந்து அபர்ணா மீண்டாளா..? தன் சொத்துக்களை அடைந்தாளா..? என்பதை பார்க்க தொடருங்கள் இந்த அழகான ஆபத்தை.