பிரிமியர் பேட்மின்டன் லீக் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்: விஜய ப

பிரிமியர் பேட்மின்டன் லீக் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம்: விஜய ப
We will surely win Premier Badminton League 2017 says Vijaya Prabhakaran

பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரில் விளையாடும் ​சென்னை ஸ்மாஷர்ஸ் பேட்மிட்டன் அணியின் வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்று​ மாலை ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சென்னை பேட்மிட்டன் அணியின் உரிமையாளர் ​​விஜய பிரபாகரன், வீராங்கனை பி.வி.சிந்து, கிரிஷ் அட்காக், கேப்ரியல் அட்காக் மற்றும் நிர்வாக இயக்குநர் கலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு வருடங்களில் சிறப்பாக விளையாடிய இந்த அணி கடந்த வருடம் கோப்பையை வென்று வெற்றி பெற்றதைபோல் இந்த ஆண்டும் சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றிபெறுவோம் எனக்கலந்து கொண்ட குழுவினர் கூறினார். இதில் பேசிய பி.வி.சிந்து எனது ஆட்டமுறை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு போட்டிகளுக்காக சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம் கடந்த வருடத்தினைப்போல் இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம் என்று கூறினார்.​

மேலும் ​​​ ​" லுங்கி டான்ஸ் ​ ​லுங்கி டான்ஸ் "பாடலுக்கு ​​விஜய பிரபாக​ருடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

எந்த ஒரு விளையாட்டிலும் சென்னை அணியின் விளையாடுபவர்கள் உலக அளவில் மிளிர்கிறார்கள் எங்கள் அணியில் ஆரம்பம் முதல் விளையாடி வரும் சிந்து உலக அளவில் ஜொலிப்பது மகிழ்ச்சியானது. எனது தந்தை அரசியலிலும், தம்பி சினிமாவிலும் இருக்கிறார்கள். எனக்கு விளையாட்டுத்துறை தான் பிடித்திருக்கிறது. நான் இதில் இயங்கவே விருப்பப்படுகிறேன். எங்கள் அணியை மென்மேலும் புகழ்பெறச் செய்ய வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் அணியில் உலகின் மிகச்சிறந்த வீரர்கள் பங்கு பெறுவார்கள். மேலும் தமிழ்நாட்டிலிருந்தும் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை எங்கள் அணியில் விளையாட வைப்போம். என்று கூறிய நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் CSK சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை நினைவுபடுத்தும் வகையில் தான் எங்கள் அணிக்கு மஞசள் உடைகளும் சிங்க லோகோவையும் வைத்திருக்கிறோம். CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போல் எங்கள் அணியும் புகழ் பெறும்.

கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் சென்னையில் எங்களால் விளையாட முடியாமல் போனது. இந்த முறை சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது பெரும் மகிழ்ச்சி. இந்த ஆண்டும் கோப்பையை கண்டிப்பாக வெல்வோம் என்று விஜய பிரபாகரன் பேசினார். இந்த பேட்மிட்டன் போட்டிகள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 14 வரை நடைபெறுகிறது.

We will surely win Premier Badminton League 2017 says Vijaya Prabhakaran