மாணவியை அசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

மாணவியை அசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருவொற்றியூர்: சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி, அதன்பிறகு மாயமானார். 

இதுகுறித்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது, இதற்கிடையில் மாயமான மாணவி, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். விசாரணையில், காசிமேடு சிங்காரவேலன் நகர் 4-வது தெருவை சேர்ந்த திலேத் (வயது 23) என்ற வாலிபர் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று, ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், திலேத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.