ஜீப்ரானிக்ஸ்

ஜீப்ரானிக்ஸ்
Zebronics signs Hrithik Roshan

ஜீப்ரானிக்ஸின் வர்த்தக தூதராக சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன்

பிரத்யேகமான ஆடியோ ரேஞ்ச் மற்றும் பவர் பேங்க்

கடந்த 20 ஆண்டுகளில் கணினி உதிரிபாகங்கள், நுகர்வோர் மின்னணுக்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற சாதனங்களில் பாராட்டத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள ஜீப்ரானிக்ஸ், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனை அதன் வர்த்தக தூதராக அறிவித்துள்ளது.

இன்றைய நவநாகரீக மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, ஸ்டைலுடன் தொழில்நுட்பத்தை இணைப்பதன் மூலம், இந்த பிராண்ட் ஹ்ரித்திக் ரோஷனை அதன் தத்துவத்திற்கு ஒரு உண்மையான முன்மாதிரியாக கருதுகிறது.

ஒருபுறம், ஹ்ரித்திக் எதையும் நேர்த்தியாக செய்பவர் என்று அறியப்படுகிறார், மறுபுறம், ஜீப்ரானிக்ஸ் அதன் உயர்ந்த தரம் மற்றும் வடிவமைப்பிற்கான வாக்குறுதியில் உண்மையாக நிற்கிறது. இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால், பிராண்ட் எதிர்பார்க்காத உச்சத்தை அடையும்.

அவரது திரைப்படங்கள் முழுவதும் நாம் அவரை ஒரு கவர்ச்சி நாயகராக அல்லது ஒரு சூப்பர் ஹீரோவாக அல்லது அரசராக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவருடைய ஆளுமையின் ஒரு கலவையாகவே அவரை பார்க்கிறோம். இது உயர்தரம் வாய்ந்த தரவரிசையும், தேவையான செயல்திறனையும் ஜீப்ரானிக்ஸ் தயாரிப்புகளில் சரியாக பிரதிபலிக்கிறது.

ஜீப்ரானிக்ஸ் இயக்குனர் திரு. ராஜேஷ் தோஷி இதுபற்றி கூறும்போது: "சந்தேகத்திற்கு இடமின்றி எங்கள் பிராண்டிற்கான மறுக்க முடியாத தேர்வாக ஹ்ரித்திக் ரோஷன் உள்ளார். அவர் இளமையான உற்சாகத்துடனும் நேர்மறையான ஊக்கத்துடனும் உள்ள ஒரு பல்சுவை நடிகராவார், இது எங்கள் வாடிக்கையாளரை அடையவும், பிராண்ட்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் புதிய வீரியத்தைக் கொண்டுவரும்"

"அவருடைய தனித்துவமான தன்மையானது உண்மையான கருத்துக்கு ஒப்பானது, மேலும் அவரை எங்கள் வர்த்தக தூதராக கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், எங்கள் பிராண்ட்டின் அணுகுமுறையைப் போலவே அவர் வழிகாட்டும் நட்சத்திரமாக 'எப்போதும் முன்னோக்கியே' இருக்கிறார்," என்று கூறினார்.

ஜீப்ரானிக்ஸின் வர்த்தக தூதராக அவரது வருகை பற்றி ஹ்ரித்திக் ரோஷன் கூறும்போது: "இந்திய இளைஞர்களுடன் ஜீப்ரானிக்ஸ் வளர்ந்து கொண்டாடப்படுவதையும், இன்றைய தலைமுறையின் மாறுகிற வாழ்க்கைக்குத் தீர்வுகளை வழங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நடிப்புக்கான எனது விருப்பத்தைத் தவிர, இசை என்னை மேலும் இயங்குவதற்குத் தூண்டுகிறது, இப்போது இந்தியாவில் ஆடியோ தயாரிப்புகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜீப்ரானிக்ஸை விட பொருத்தமானது வேறென்ன. எனவே, நான் ஜீப்ரானிக்ஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்".

அறிமுகங்கள் மற்றும் விளம்பரங்களைத் தவிர, ஹ்ரித்திக் ரோஷன் பல்வேறு தளங்களுக்கிடையே பிராண்ட் தொடர்புடனும் தீவிரமாக ஈடுபடுவார். இந்த ஆண்டு விரைவில் ஹ்ரித்திக் ரோஷனுடன் சேர்ந்து தனது பிராண்ட் பிரச்சாரத்தை ஜீப்ரானிக்ஸ் திட்டமிடுகிறது.

Zebronics signs Hrithik Roshan