புதிய திருப்பங்களுடன் மீண்டும் ஜீ தமிழ் “ச ரி க ம ப”

புதிய திருப்பங்களுடன் மீண்டும் ஜீ தமிழ் “ச ரி க ம ப”
Zee Tamizh Sa Re Ga Ma Pa returns with a new season

சென்னை: தமிழகம் முழுவதும் இளம் ரத்தினங்களைக் காட்சிப்படுத்திய குதூகலமான ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸைத் தொடர்ந்து, ஜீ தமிழ் விரைவில் ச ரி க ம ப ‘மூத்தவர்களுக்கான’  சீசனைத் தொடங்க உள்ளது.  மூத்தவர்களின் திறமையை வெளிக்காட்டச் சரியான தளத்தை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் கடந்த சில மாதங்களாக இந்தச் சேனல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சிறந்த பாடகர்களை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறது.  ச ரி க ம ப கிராண்ட் பிரிமியர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017 அக்டோபர் 15 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஒளிபாப்பாகும்.  இந்தக் காட்சியைப் பார்வையாளர்கள்  ஜீ தமிழ் புதிய ஹெச்டி சேனலிலும் கண்டு மகிழலாம்.

மூன்றாவது சீசனை ஜீ தமிழின் பிரபல தொகுப்பாளிகளுள் ஒருவரான அர்ச்சனா சந்தோக் தொகுத்து வழங்குவார்.  பின்னணிப் பாடகரான கார்த்திக்,  பின்னணிப் பாடகரும், இசை அமைப்பாளருமான விஜய் பிரகாஷ் ஆகியோருடன் ஜீ தமிழ்க் குடும்பத்தில் இளமை மாறாத பின்னணிப் பாடகரான ஸ்ரீநிவாஸும் இணைந்து நடுவரகளாகச் செயல்படுவார்கள். 

இந்த சீசனுக்கான தேடுதல் வேட்டை கடந்த ஒரு மாத காலமாகச் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் நடைபெற்றது. பங்கேற்ற ஆயிரக் கணக்கானவர்களுள்  40 நபர்கள் குறைப் பட்டியலிடப்பட்டனர். பாடும் திறமை, இசை குறித்த புரிதல் ஆகிய முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு நடுவர்கள் 20 இறுதிச் சுற்றாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். 20 இறுதிச் சுற்றாளர்களும் தங்களது காந்தக் குரல் மூலம் செவிகளுக்கு விருந்து படைத்து எல்லையில்லாத பொழுதுபோக்கை அள்ளித் தரவிருக்கின்றனர்.

ஜீ தமிழின் அதி நவீன ஹெச்டி தொழில்நுட்பம், கண்கவர் அரங்க அமைப்புகளைத், தொலைக்காட்சித் திரைகள் மூலம், பார்வையாளர்களை இசை உலகிற்கு அழைத்துச் செல்லும்.  வரவேற்பறையில் இருந்து கொண்டே உயர் தரமான பொழுதுபோக்கு அனுபவத்தைப் பார்வையாளர்கள் பார்த்து மகிழலாம்.  ஜீ தமிழ் ஹெச்டி தொழில்நுட்பம் ஆதார் டிஜிடலில் எஸ்சிவி 908, டிசிசிஎல் 1304, விகே டிஜிடல் 156 & 191 ஆகியவற்றில் கிடைக்கும். 

ச ரி க ம ப நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2017 அக்டோபர் 15 முதல் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். 

~ நடுவர்களைத் தங்கள் அசாத்தியத் திறன் மூலம் ஈர்த்துச் சாம்பியனாகத் தகுதியப் பெறக் கடுமையாகப் போட்டியிடும் இறுதிச் சுற்றாளர்களின் மயக்கும் குரலைக் கேட்க ச ரி க ம ப நிகழ்ச்சியைத் தொடர்ந்து பாருங்கள்.

Zee Tamizh Sa Re Ga Ma Pa returns with a new season