தமிழக விவசாயிகள் இலை, தழைகளை உண்ணும் போராட்டம்

தமிழக விவசாயிகள் இலை, தழைகளை உண்ணும் போராட்டம்
delhi farmers protest by eating leaves and straw

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவேரி வேளாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வறட்சியால் விளைநிலங்கள் வரண்டுபோனதால், உண்ண உணவின்றி காய்ந்து போன இலை, தழைகளையும் மாடு தின்னும் வைக்கோல்களையும் உண்ணும் அவலநிலைக்கு ஆகிவிட்டோம் என்பதை வலியுறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

delhi farmers protest by eating leaves and straw