RBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது

RBI லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்தது

 

இந்திய ரிசர்வ் வங்கி, லக்‌ஷ்மி விலாஸ் வங்கிக்கு ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது. ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகள் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

வங்கியின் நிதி நிலை குறித்து அதன் சட்ட ரீதியான ஆய்வில் “வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவுகளுக்கு இணங்கவில்லையென” ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் எந்தவொரு பரிவர்த்தனை அல்லது வங்கியின் வாடிக்கையாளர்களுடனான ஒப்பந்தத்தின் செல்லுபடியை கூறும் நோக்கமல்ல” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் வங்கியை இணைப்பதை மத்திய வங்கி நிராகரித்த ஒரு வாரத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.