சென்னையில் தொடங்கிய மழை.. பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் பருவமழை சூடுபிடித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது சாரல் மழை பெய்கிறது. ஈக்காட்டுதாங்கல், மயிலாப்பூர், மந்தைவெளி, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. அடையார் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்று நாள் முழுக்க மிதமான மழையும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலைக்கு மேல் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.