சர்வதேச மல்யுத்த போட்டி : இந்திய வீரர் தீபக் பூனியா முதலிடம்
சர்வதேச மல்யுத்த சம்மேளனம், வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் சமீபத்தில் நடைபெற்ற உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றி சாதனை படைத்த இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவரை விட 4 புள்ளி பின்தங்கிய உலக சாம்பியன் ஹசன் அலியாஜாம் யாஸ்டானி (ஈரான்) 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். மேலும் இந்த தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தை இழந்து 2-வது இடத்திற்கு இறங்கியுள்ளார். இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) 'நம்பர் ஒன்' இடத்தை பெற்றுள்ளார்.