தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான அட்டவணை
1ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 27-ஆம் தேதி
2ம் கட்ட தேர்தல் : டிசம்பர் 30 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் : டிசம்பர் 6 ஆம் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் : டிசம்பர் 13-ஆம் தேதி
திரும்ப பெற கடைசி நாள் : டிசம்பர் 18 ஆம் தேதி
தேர்தல் முடிவு : 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி