கணவரை சேர்த்து வைக்காததால் 2வது மனைவி தீக்குளித்து தற்கொலை

கணவரை சேர்த்து வைக்காததால் 2வது மனைவி தீக்குளித்து தற்கொலை
கணவரை சேர்த்து வைக்காததால் 2வது மனைவி தீக்குளித்து தற்கொலை

கணவரை சேர்த்து வைக்காததால் 2வது மனைவி தீக்குளித்து தற்கொலை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே திருவெள்ளைவாயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் கோயம்பேட்டில் வேலை செய்யும்போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த காமாட்சி(32) என்பவருடன் முருகனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் மேல்மலையனூர் கோயிலில் திருமணம் செய்து பாண்டிச்சேரியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில், முருகனை காணவில்லை என காட்டூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டிசேரியில் இருந்து இருவரையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகனை அவரது மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, காமாட்சியை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், திருவெள்ளைவாயலில் உள்ள முருகனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காமாட்சி வந்து முருகனை சேர்த்து வைக்ககோரி பெட்ரோலை தனது உடலில் ஊற்றி காமாட்சி தீ வைத்து கொண்டார். இதில் உடல்கருகி பரிதாபமாக பலியானார். புகாரின்படி காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.