சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி மருத்துவமனை தனியார் மருத்துவமனையில் 5 மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், மூக்கிலும் வாயிலும் ரத்த சொட்ட சொட்ட குழந்தை உயிரிழப்பு

சென்னை, திருமுல்லைவாயில் , தென்றல் நகரை சேர்ந்தவர்  சங்கர்(31) தனலட்சுமி(26)தம்பதியினர். இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஐந்து மாத கை  குழந்தை ஒன்று உள்ளது
அந்த குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மூச்சுத் திணறல் போன்ற உடல் நலக்குறைவு இருந்துள்ளது

 அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் குழந்தைக்கு அதிகமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால்   

 சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள காஞ்சி காமகோடி தனியார் மருத்துவமனையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்

இதைதொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வந்துள்ளது 

நேற்று இரவு காஞ்சி காமகோடி மருத்துவமனையில்,மருத்துவர்கள்  பெற்றோரான தனலட்சுமியிடம்  குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகரித்து வருகிறது, இதனால் குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள்  ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர் தற்போது வரை 4.லட்சம் ரூபாய் ரொக்கம் பணம் செலுத்தியுள்ளனர் கண்டிப்பாக குழந்தையை காப்பாற்றி விடுவோம் என்று நம்பிக்கையுடன் பணத்தை பெற்றுக் கொண்டு பின்னர்

ஆவணங்களில் தனலட்சுமி கை எழுத்து போட்டுவிட்டு நேற்று 8.00 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து காலையில் குழந்தையை பார்த்துக் கொள்ளலாம் என்று வீடு திரும்பி உள்ளார்

தொடர்ந்து குழந்தைக்கு மேல் சிகிச்சை நடைபெற்று வந்துள்ள நிலையில் இன்று காலை மருத்துவமனையில் இருந்து தனலட்சுமிக்கு குழந்தை இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்

இதனைக் கண்ட பெற்றோர்கள்  அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்த்தபோது குழந்தைக்கு மூக்கிலும், வாயிலும் ரத்தம் சொட்ட சொட்ட இறந்த நிலையில் காணப்பட்டதை கண்டு பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே கதறி அழுந்துள்ளனர்

குழந்தை இறந்ததைப் பற்றி பெற்றோர்கள் மருத்துவரிடம் கேட்ட பொழுது குழந்தைக்கு அதிகமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 அதற்கு பெற்றோர்கள்  மருத்துவர்கள் என் குழந்தை இறந்தற்கு முறையான பதில் அளிக்காமல் உண்மையை மறுக்கின்றனர் தெரிவிக்கின்றனர்

மேலும் என் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் என் குழந்தை இறந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 நேற்று இரவு கூட குழந்தையை பார்க்கும் பொழுது குழந்தை கை கால்களை அசைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் காலையில்  இறந்து விட்டதாக கூறுவது என்னால் நம்ப முடியவில்லை

என் குழந்தை இறப்புக்கு காரணம் மருத்துவமனை நிர்வாகம் தான் என் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை காண்பிக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவிக்கிறனர்.

இதுவரைக்கும் குழந்தையின் சிகிச்சிக்காக  4 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 2,50,000 கொடுத்தால் தான் மருத்துவமனையில் குழந்தையின் உடலை கொடுப்போம் என மருத்துவர்கள் கராராக மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்

அதற்கு பெற்றோர்கள் என் குழந்தையின் உயிருக்கு காரணம் இந்த மருத்துவமனை தான் என குற்றம் சாட்டி வருகின்றனர்

இதற்கு தமிழ்நாடு அரசு தனி குழு அமைத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்