நடிகர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்

நடிகர் விஜயகாந்தின் வீடு, கல்லூரி ஏலம்

ரூ.5.52 கோடி கடன் பாக்கி காரணமாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் வீடு, கல்லூரி மற்றும் நிலம் ஆகியவற்றை ஏலத்துக்கு விடுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், 

''காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் பொறியியல் கல்லூரி ஏலம் விடப்படுகிறது. அத்துடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் 4,651 சதுர அடி நிலம் மற்றும் 10,271 சதுர அடி வணிகக் கட்டிடமும் ஏலத்துக்கு விடப்படுகிறது. கடன் தொகையான 5 கோடியே 52 லட்சத்து 73 ஆயிரத்து 825 ரூபாய்க்காக இந்த ஏலம் நடத்தப்படுகிறது. ஜூலை 26-ம் தேதி ஏல விற்பனை செய்யப்படும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.