மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று புதன்கிழமை காலை விபத்தில் சிக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி என்ற இடத்தில் தரையிறங்கும்போது அது விபத்துக்குள்ளானது.
அஜித் பவாரின் பாராமதி தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அஜித் பவார் அவ்வப்போது அங்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாராமதி சென்றுள்ளார். சிறிய ரக தனி விமானம் மூலம் அஜித் பவார் அங்கு சென்றுள்ளார். அப்போது தரையிறங்கும்போது அதில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. பாராமதி ஏர்போர்ட் என்பது மிகவும் சிறியது. அங்கு தரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், அஜித் பவாரும் அவரது பாதுகாவலர்களும் அதே விமானத்தில் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மகாராஷ்டிரத் துணை முதல்வரான தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.




