நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி
நலம் தரும் நவராத்திரி
நலம் தரும் நவராத்திரி
நலம் தரும் நவராத்திரி
நலம் தரும் நவராத்திரி

நலம் தரும் நவராத்திரி

ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு கர்நாடக இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளை நவராத்திரியின் 9 நாட்களும் ஒளிபரப்பி வருகிறது ஜெயா டிவி. அவ்வகையில் இந்த ஆண்டும் நவராத்திரி முதல் நாளான செப்டம்பர் 26 திங்கள் கிழமை முதல் நாள்தோறும் மாலை 6:00 மணிக்கு ‘நலம் தரும் நவராத்திரி’ என்ற சிறப்பு இசைக்கச்சேரி நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நிஷா ராஜகோபாலன், லாவண்யா சுந்தரராமன், வித்யா கல்யாணராமன், உள்ளிட்ட பிரபல இளம் கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று துர்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் முப்பெரும்தேவியர் மீது பல பாடல்களை பாடியுள்ளனர். நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நவராத்திரி நிறைவு நாளான சரஸ்வதி பூஜை தினத்தில் பெங்களூரைவைச் சேர்ந்த அனைத்து மகளிர் இசைக்குழுவினரான விபான்ச்சி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி ஒளிபரப்பாகவுள்ளது. வளர்ந்து வரும் கர்நாடக இசைக்கலைஞர்களுக்கு நல்லதொரு மேடையாக அமையும் இந்நிகழ்ச்சி, கர்நாடக இசை ரசிகர்களின் செவிகளுக்கும் இன்னிசை விருந்தாக அமையும் என நிகழ்ச்சிக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.