காவேரி குழும மருத்துவமனைகளின் பிராண்ட் தூதராக  பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி 

காவேரி குழும மருத்துவமனைகளின் பிராண்ட் தூதராக  பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி 
காவேரி குழும மருத்துவமனைகளின் பிராண்ட் தூதராக  பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி 

காவேரி குழும மருத்துவமனைகளின் பிராண்ட் தூதராக 
பிரபல கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி 


தேசியம், 18 ஆகஸ்ட் 2021: தமிழ்நாட்டில் உடல்நல பராமரிப்பு துறையில் ஒரு முன்னணி சங்கிலி தொடர் நிறுவனமாகத் திகழும் காவேரி குழும மருத்துவமனைகள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனியை தனது பிராண்ட் தூதராக இணைத்துக் கொண்டிருக்கிறது. 
காவேரி குழும மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர், டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் இது குறித்து பேசுகையில், “ஒரு சிறு நகரத்தைச் சேர்ந்தவரான தோனி தனது தளராத நம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக கிரிக்கெட் உலகில் மிக உயர்ந்த இடத்தை எட்டி சாதனை படைத்தவர். காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் பயணமும், தோனியின் பயணமும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன. திருச்சி நகரில் 30 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனையுடன் எமது பயணத்தை நாங்கள் தொடங்கினோம். இப்போது, தமிழ்நாடு முழுவதிலும் மற்றும் பெங்களூருவிலும் கிளை மருத்துவமனைகளைக் கொண்டு 1500 படுக்கை வசதிகளைக் கொண்ட உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை குழுமமாக நாங்கள் வளர்ந்திருக்கிறோம். கட்டுபடியாகக்கூடிய மிதமான செலவில் மிக உயர்ந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவது என்ற செயல் நோக்கத்தோடு எமது முன்னேற்றப் பயணம் தொடர்கிறது. நம்பிக்கை, நம்பகத்தன்மை, நேர்மை மற்றும் கூர்நோக்க பார்வைகொண்ட தலைமைத்துவ பண்பு போன்ற எமது குறிக்கோள்கள் மற்றும் செயல்திட்டங்களோடு மிகச்சரியாக பொருந்துபவராக தோனி இருப்பதால், எமது பிராண்டுக்கு மிகச்சிறப்பாக இவர் பொருந்துவார் என்று நாங்கள் கருதுகிறோம். உடல் வலிமையும், உடற் தகுதியும், ஆரோக்கியத்தின் மீதான அக்கறையும் கொண்டுள்ள ஒரு நபரான தோனி, எமது சுகாதார பராமரிப்பு பிராண்டின் மிக உகந்த தூதராகவும், பிரதிநிதியாகவும் திகழ்கிறார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை இன்னும் ஊக்குவிப்பதற்கு தோனி எமது பிராண்டின் தூதராக நிச்சயம் உதவுவார்,” என்று கூறினார்.
காவேரி குழும பிராண்டுனான தனது பிணைப்பு குறித்து பேசிய எம் எஸ் தோனி, “நோயாளிகள் மீது கனிவான அக்கறை மற்றும் அவர்களது திருப்தி மீது சிறப்பு கவனம் கொண்டு, மிகச்சிறப்பான மருத்துவ சேவைகளை காவேரி குழும மருத்துவமனைகள் வழங்கி வந்திருக்கின்றன. இந்தியாவின் மிக அதிக நம்பிக்கை மற்றும் பிரபலமான சுகாதார பராமரிப்பு பிராண்டுகளுள் ஒன்றாகத் திகழும் காவேரி குழுமத்தோடு இணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.
 

About Kauvery Hospital:
Kauvery Hospitals is ‘A new Age Family Hospital’ with Multi Specialty Clinical Expertise and a pioneer in the ‘HealthCare Provider’ industry, making healthcare affordable. Kauvery is one of the few corporate hospital chains to successfully integrate operations into Tier 1 cities after launching into Tier 2 cities. It is also one of the few hospitals founded by Medical experts with a keen focus on delivering personalized and specialized health care with warmth.
Kauvery Hospitals is currently a 1500+ bed hospital group with presence in Chennai, Trichy, Hosur, Salem & Bengaluru in addition to planned entry in new markets.
Apart from having diverse Multispecialty tertiary care expertise, Kauvery Hospitals house one of three ‘Cardiac Centres of Excellence in South India’. In today’s times where the healthcare industry is more and more commoditized, Kauvery Hospitals stands tall with its promise of making medical expertise and technology truly affordable with empathy and care at every stage of a person’s healthcare needs.