அருள் நேரம்

அருள் நேரம்
அருள் நேரம்

அருள் நேரம்

 

ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6:00 மணிக்கு ‘அருள் நேரம்’ என்ற பக்தி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது. இதில் பிரசித்திபெற்ற தொன்மையான ஆலயங்களின் ஆன்மீக சிறப்புகளையும், அவற்றின் தல வரலாற்றையும் காட்சிப்படுத்தி தொகுத்து வழங்குகின்றனர். அதோடு, ‘தினம் ஒரு அபிஷேகம்’ என்ற பகுதியில் செவிகளுக்கினிய பக்திப் பாடல்களை, இறைவனின் அபிஷேக – ஆராதனை திருக்காட்சிகளுடன் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்புகின்றனர்.

 

மேலும், ஆன்மீக சந்தேகங்களை தெளிவுபடுத்தும் ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்’ பகுதியை திரு,மகேஷ் ஐயரும், புலர்காலை பொழுதை அர்த்தமுள்ளதாக ஆக்கும் ‘ஆனந்த ஆரம்பம்’ பகுதியை திரு.மணிகண்டனும், சித்தர்களின் வரலாற்றை பதிவு செய்யும் ‘குருவே சரணம்’ பகுதியை திரு.பி.சுவாமிநாதனும் வழங்குகின்றனர்.