கலைஞர் தொலைக்காட்சியில் "ஆனந்தம்" மெகாத்தொடர்

"தெய்வமகள்", "திருமதி செல்வம்", "நாதஸ்வரம்" என குடும்பங்கள் கொண்டிய நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வரும் கலைஞர் தொலைக்காட்சியில், அடுத்ததாக மக்களின் பேராதரவைப் பெற்ற "ஆனந்தம்" மெகாத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்திருக்கும் இந்த நெடுந்தொடரில், சுகன்யா கதையின் நாயகியாக சாந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், குடும்ப தலைவர் ராதாகிருஷ்ணனாக டெல்லி குமாரும், குடும்ப தலைவி ராஜேஸ்வரியாக  ஜான்வியும், அபிராமியாக பிருந்தா தாசும், கார்த்திக்காக கமலேஷூம்,  மதனாக சதீஷ்குமாரும் நடித்துள்ள இந்த நெடுந்தொடரை வருகிற பிப்ரவரி 20 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.

திருமணமாகி கணவனை பிரிந்த சாந்தி தனது குழந்தையுடன், கார்த்திக் வீட்டில் தஞ்சமடைகிறார். இதற்கு குடும்ப தலைவரான ராதாகிருஷ்ணன் தடை போட, கார்த்திக் - சாந்தியின் முடிவு என்னவாக இருக்கும்? தன்னை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தில் சாந்திக்கு இடம்  கிடைக்குமா? மூத்த மருமகளான அபிராமியின் இரட்டை வேடம் வெளிப்படுமா? என்கிற விறுவிறுப்பான கதைக்களத்தில் தொடர் நகரவிருக்கிறது.