ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அரிதான மரபணு நோய்க்கு வெற்றிகர சிகிச்சை!

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய  எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அரிதான மரபணு நோய்க்கு வெற்றிகர சிகிச்சை!
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அரிதான மரபணு நோய்க்கு வெற்றிகர சிகிச்சை!
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய  எம்ஜிஎம் ஹெல்த்கேர்! அரிதான மரபணு நோய்க்கு வெற்றிகர சிகிச்சை!

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த நோயாளிக்கு மறுவாழ்வு வழங்கிய

எம்ஜிஎம் ஹெல்த்கேர்!

அரிதான மரபணு நோய்க்கு வெற்றிகர சிகிச்சை!

~ 35 வயதான இந்நோயாளிக்கு செய்யப்பட்ட அரிதிலும், அரிதான ஒருங்கிணைந்த அறுவைசிகிச்சையில் உயிரோடுள்ள நபரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையுடன் செயற்கை பெரிய இரத்தநாள மறுகட்டமைப்பும் இடம்பெற்றது~

சென்னை: டிசம்பர் 6, 2022: சென்னையில் புகழ்பெற்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் ஒரு அங்கமாக இயங்கி வரும் கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை மையம், அரிதான மரபியல் இரத்த நோய் பாதிப்பால் அவதிப்பட்ட ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 35 வயதான ஆண் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறது. PNH (இரத்தம் உறைதல் மற்றும் சிதைவு திரும்பத்திரும்ப நிகழும் பாதிப்பு சாத்தியம் மற்றும் கல்லீரலிலிருந்து இரத்த ஓட்டத்தை தடை செய்கின்ற பட்-சியாரி சிண்ட்ரோம் (BCS) என்ற அரிதான மரபியல் இரத்தநோய் பாதிப்பு இந்நோயாளிக்கு இருந்தது. இதன் காரணமாக, கீழ்ப்புற பெருஞ்சிரை இதயம் வரை இரத்த உறைவுக்கட்டிகள் செல்லும் நிலையும் மற்றும் கல்லீரல் செயலிழப்பின் இறுதிநிலையும் இவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நோயாளிக்கான சிகிச்சையிலிருந்த சிக்கல்களை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒரு சிகிச்சை அணுகுமுறையை மேற்கொள்வதென்று எம்ஜிஎம் மருத்துவமனையின் நிபுணர்கள் முடிவெடுத்தனர். இக்குழுவில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவைசிகிச்சை நிபுணர்கள் (டாக்டர். தியாகராஜன் ஶ்ரீனிவாசன் – கல்லீரல் உறுப்புமாற்று துறை இயக்குனர், டாக்டர். கார்த்திக் மதிவாணன் – கல்லீரல் உறுப்புமாற்று துறை இணை இயக்குனர்) இதய நெஞ்சக அறுவைசிகிச்சை நிபுணர்கள் (டாக்டர். கேஆர். பாலகிருஷ்ணன், தலைவர் – இதய உறுப்புமாற்று சிகிச்சைத் துறை) குருதியியல் நிபுணர்கள், கல்லீரல் உணர்விழப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயிர்காப்பு சிகிச்சை நிபுணர்கள் (டாக்டர். தினேஷ் பாபு மற்றும் டாக்டர். C. நிவாஸ்) மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, இந்நோயாளிக்கான தனித்துவமான சிகிச்சை நெறிமுறையை உருவாக்கினர். கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் இதயத்தை சென்றடைகின்ற இரத்தநாளங்களில் உள்ள இரத்த உறைவுக்கட்டிகளை அகற்றுதல் என்ற ஒருங்கிணைந்த சிகிச்சைமுறையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

நடத்தப்பட்ட சிகிச்சை செயல்முறையை விளக்கிய டாக்டர். தியாகராஜன் ஶ்ரீனிவாசன் கூறியதாவது: “மரபணு நோய் இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டதற்குப் பிறகு இந்நோயாளியின் சகோதரர் அவரது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கினார். இந்த அறுவைசிகிச்சைக்கு முன்பும் மற்றும் பின்பும், இரத்த உறைவு மற்றும் சிவப்பணு அழிவு நிகழாமல் தடுக்க மோனோக்ளோனல் ஆண்ட்டிபாடி தெரபி (Eculuzimab) என்ற சிகிச்சை பலமுறைகள் இந்நோயாளிக்கு வழங்கப்பட்டது. உயிருள்ள நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையுடன் கீழ்ப்புற பெருஞ்சிரைக்கு மாற்றாக ஒரு சின்தெட்டிக் டேக்ரான் கிராஃப்ட்* செயல்முறை ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த அரிதான சிகிச்சை செயல்முறை நிறைவடைந்து, நான்கு மாதங்கள் ஆகியிருக்கின்றன மற்றும் இச்சிகிச்சையைப் பெற்ற நோயாளி அப்பாதிப்பிலிருந்து தற்போது விடுபட்டு, நன்றாக இருக்கிறார். அவரது மரபு நோயை குணமாக்குவதற்கு ஒரு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு தற்போது திட்டமிட்டு வருகிறது. கல்லீரல் செயலிழப்புடன் ஒரு சிக்கலான மற்றும் அரிதான மரபியல் நோய்க்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையோடு இத்தகைய சிக்கலான சிகிச்சை இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.”

உயிருக்கு ஆபத்தான, அரிதிலும் அரிதான நோயால் அவதிப்பட்ட இந்த நோயாளி பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட டாக்டர். கார்த்திக் மதிவாணன், “மரபியல் நோய்நிலையானது, இறுதிநிலை கல்லீரல் செயலிழப்பிற்கு இவரை இட்டுச்செல்கின்ற நிலையின் காரணமாக கீழ்ப்பற பெருஞ்சிரை மாற்றப்படும் செயல்முறையோடு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையும் இந்நோயாளிக்குத் தேவைப்பட்டது. இரத்தநாளங்களில் திரும்பத் திரும்ப இரத்த உறைவு ஏற்படுவதற்கு மிக அதிகமான வாய்ப்புகள் இதில் இருந்தன என்றபோதிலும், இவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த சிகிச்சைமுறை ஒன்றே விருப்பத்தேர்வாக இருந்தது.” என்று கூறினார்.

உயிர்காப்பு சிகிச்சை நிபுணர்களான டாக்டர். தினேஷ் பாபு மற்றும் டாக்டர். C. நிவாஸ் ஆகியோர் பேசுகையில், “சிவப்பு இரத்தஅணுக்கள் அதிவேகமாக குறைந்து வருதல், இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகுதல், பாதிக்கப்பட்ட எலும்புமஜ்ஜை செயல்பாடு ஆகிய பிரச்சனைகளுக்கு மோனோகுளோனல் ஆன்ட்டிபாடி தெரபி மற்றும் இரத்தஉறைவு தடுப்பு மருந்துகள் மூலம் இந்நோயாளிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனையைச் சேர்ந்த அனுபவமும், திறனும் மிக்க பல்வேறு சிறப்புப் பிரிவுகளின் மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழு, 35 வயதான இந்நபருக்கு வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அரிதான வாய்ப்பை தந்திருக்கிறது,” என்று கூறினர்.

*டாக்ரான் கிராஃப்ட் என்பது, உடல் திசுக்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு செயற்கையான பாலியஸ்டர் பொருளாகும். இரத்த நாளங்களை மாற்றுவதற்கு அல்லது அவைகளை சரிசெய்வதற்கு உதவும் இவைகள், ஒரு குழாய் வடிவத்தில் இருக்கின்றன.

About MGM Healthcare:

Born out of a need for altruism, MGM Healthcare is obsessed with bettering patient experiences and improving clinical outcomes through expertise, passion and technology. The manifestation of this dedication to superlative health-caring is a state-of-the-art hospital on Nelson Manickam Road having 400 beds, 50 out-patient consultation rooms, over 100 critical care beds, 250+ Doctors, 12 Centers of excellence, 30+ Clinical Departments, 12 state-of-the-art Operating Theatres and 24 x 7 comprehensive Emergency Care. Here, a host of eminent surgeons and physicians wield a potent combination of skill and cutting edge technology to elevate care and outcomes to new levels. MGM Healthcare is the first hospital in Asia with the highest rated USGBC LEED Platinum-certified Green Hospital.

Over the past year, the team of clinical experts at MGM Healthcare have performed many innovative and complex surgeries in the pursuit of establishing trust and clinical excellence. MGM Healthcare designed and equipped with the latest in technology and equipment is poised to drive patient centricity and clinical excellence of both the domestic and international patients.