“வட்டமேசை விவாதம்”

“வட்டமேசை விவாதம்”
“வட்டமேசை விவாதம்”
“வட்டமேசை விவாதம்”
“வட்டமேசை விவாதம்”
“வட்டமேசை விவாதம்”

“வட்டமேசை விவாதம்”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடப்பு அரசியலை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கில் சுவையான விவாதங்களின் வழியாக கொண்டு சேர்ப்பதுதான் “வட்டமேசை விவாதம்” நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

தமிழகம் மற்றும் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படும் அரசியல் நிகழ்வை மையமாகக் கொண்டு ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதுதான் வட்டமேசை விவாதத்தின் நோக்கம். விறுவிறுப்பான  தலைப்புகள் மூலம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என மாதத்தில் இருமுறை  தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் "வட்டமேசை விவாதம்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள்  மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் "வட்டமேசை விவாதம்" புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.

வட்டமேசை விவாதம் நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயன் மற்றும் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர்  தொகுத்து வழங்குகிறார்கள்.