105 விளையாட்டுச் சாதனையாளர்களைக் கௌரவித்த எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர்

105 விளையாட்டுச் சாதனையாளர்களைக் கௌரவித்த எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர்
105 விளையாட்டுச் சாதனையாளர்களைக் கௌரவித்த எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர்

105 விளையாட்டுச் சாதனையாளர்களைக் கௌரவித்த எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமத்தின் வேந்தர்

காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST), சாதனையாளர்கள் தினம் 2022 ஐ மிகவும் சிறப்பாக நடத்தியது. நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் அதிபர் முனைவர் டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் தலைமை வகித்தார். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி, கெலோ இந்தியா மற்றும் பிற போட்டிகளில் சாதித்த / வெற்றிபெற்ற SRMIST சாதனையாளர்களுக்குச் சுமார் 105 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தலா ரூபாய் 5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் SRMIST இன் துணைவேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் எஸ். பொன்னுசாமி மற்றும் இயக்குநர் (விளையாட்டு) முனைவர் ஆர். மோகனகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

சமீபத்திய டோக்கியோ ஒலிம்பிக்கில் லேசர் ரேடியல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற SRMIST மாணவிகள் நேத்ரா குமணன் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை மாளவிகா பன்சோட் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தர்

முனைவர் டி.ஆர். பாரிவேந்தர் அவர்கள் பேசுகையில் “ஒவ்வொரு முறையும் ஒரு SRMIST மாணவர் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெறும்போது, நான் அந்தச் சாதனையைச் செய்ததாகவே உணர்கிறேன். எங்கள் மாணவர்கள் தங்கள் நிறுவனத்தைப் பெருமைப்படுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார். மேலும் சாதிக்க இன்னும் நிறைய இருக்கின்றன என்றும் மாணவர்களைக் கடினமாக உழைக்கவும் வலியுறுத்தினார். உயர்ந்த நம்பிக்கை, விடாமுயற்சி, தைரியம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற அனைவரையும் ஊக்குவித்தார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களின் மனதில் வீரத்தையும் விவேகத்தையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்துவதாக அமைந்திருந்தது.

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அவர்களும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் உரைகளை வழங்கினர். இந்த அரிய விழாவில் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.