சபரிமலை ஐயப்பன் கோவில் வெளிமாநில பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் முதியோர், சிறுவர்கள் வரவேண்டாம்

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நெருங்கி வரும் நிலையில், வெளிமாநில பக்தர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் கூறியுள்ளார். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக திறக்கப்படுகிறது. இதனிடையே, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட சான்றிதழை கையில் கொண்டு வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். கோயிலிலும் பக்தர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். மலையேறும் போது, முகக்கவசம் அணிய வேண்டுமா, தேவையில்லையா என்பது பற்றி விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 65 வயதிற்கும் மேற்பட்ட மற்றும் சிறார்கள் கோயில்களுக்கு வர வேண்டாம் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.  பக்தர்கள் சபரிமலையில் தங்குவதற்வோ, எருமேலி, பம்பை ஆற்றில் குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.