சரத்பாபு அருமையான மனிதர், தனது நண்பர் மறைவை தாங்க முடியவில்லை: ரஜினிகாந்த் உருக்கம்..!

 சரத்பாபு அருமையான மனிதர், தனது நண்பர் மறைவை தாங்க முடியவில்லை: ரஜினிகாந்த் உருக்கம்..!
சரத்பாபு அருமையான மனிதர், தனது நண்பர் மறைவை தாங்க முடியவில்லை: ரஜினிகாந்த் உருக்கம்..!

தனது நண்பர் சரத்பாபு மறைவை தாங்க முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபல நடிகர் சரத்பாபு, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட நடிகர் சரத்பாபு உடல், இன்று மதியம் 2 மணியளவில் கிண்டி தொழிற்பேட்டை சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்பாபு உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நானும் சரத்பாபுவும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் நன்றாக ஓடின. சரத்பாபு முன் நான் சிகரெட் பிடித்தால் என்னை அவர் அன்புடன் கடிந்துகொள்வார். நான் சிகரெட் பிடித்தால் சரத்பாபு அதை எடுத்து கீழே போட்டு அணைத்துவிடுவார். சரத்பாபு எனக்கு அருமையான நண்பர்; நல்ல மனிதர்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். என் மீது அளவுகடந்த பிரியம் வைத்தவர் நடிகர் சரத்பாபு. நான் நடிகராவதற்கு முன்பே சரத்பாபுவை எனக்கு தெரியும் இவ்வாறு கூறினார்.