இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு

இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு
இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு
இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு
இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு

 

 
இன்சுலினின் மறக்கப்பட்ட வரலாறு: பிரபல நீரிழிவு சிகிச்சை மருத்துவர் டாக்டர். வி. மோகன் எழுதிய புத்தகம் வெளியீடு
~ ‘Banting, Bose and Beyond’ என்ற தலைப்பிலான இப்புத்தகம், தளராத நம்பிக்கையோடு நீரிழிவை எதிர்த்துப் போராடி வருகின்ற வயது வந்த நபர்கள் மற்றும் குழந்தைகளின் நிஜ வாழ்க்கை கதைகளையும் நேர்த்தியாக ஒருங்கிணைத்து விவரிக்கிறது ~
சென்னை, 30 மே 2022: பல இளம் இந்தியர்களுக்கு முதலாம் வகை நீரிழிவு நோய் இருக்கும் நிலையில் இன்றைய காலகட்டத்தில் உயிர்காக்கும் சிகிச்சையாக இன்சுலின் கருதப்படுகிறது. முதலாம் வகை நீரிழிவால் அவதிப்படுபவர்களுக்கு இன்சுலினைத் தவிர்த்து வேறு ஏதும் மருந்து இப்போது இல்லை. இன்சுலின் கண்டறியப்பட்ட வரலாறில் தொடங்கி, இந்தியாவிற்கு அது வந்து சேர்ந்த விதம் மற்றும் அது காப்பாற்றியிருக்கின்ற எண்ணற்ற நபர்களது வாழ்க்கைக்கதைகள் வரை இதுகுறித்த வியப்பூட்டும் செய்திகளின் தொகுப்பாக டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும், அதன் தலைமை நீரிழிவு மருத்துவருமான டாக்டர். வி. மோகன், ‘பேண்டிங், போஸ் அண்டு பியாண்டு’: “இந்தியாவில் இன்சுலின் எவ்வாறு எண்ணற்றோரின் வாழ்க்கையை மாற்றியது என்பதற்கான ஊக்கமளிக்கும் கதைகள்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பான புத்தகத்தை எழுதியிருக்கிறார். அவர் சமீபத்தில் எழுதிய இப்புத்தகத்தின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் டாக்டர். J.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இப்புத்தகத்தை வெளியிட்டார். நீரிழிவு குறித்து பல அரிய தகவல்களை உள்ளடக்கிய இப்புத்தகம், பலருக்கும் உத்வேகமளிப்பதாக, நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட டாக்டர். J.ராதாகிருஷ்ணன், இப்புத்தகத்தின் ஆசிரியரான டாக்டர். வி. மோகன் அவர்களை பெரிதும் பாராட்டினார். இப்புத்தகத்தின் முதல் பிரதியை, பட்டயக் கணக்கர் திருமதி. ரோஷன் போஞ்சா பெற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக முதலாம் வகை நீரிழிவு நிலையோடு வாழ்ந்து வருபவராக திருமதி. ரோஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரைப் பற்றிய செய்தியும் இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
இச்சிறப்பான தருணத்தில் டாக்டர். வி. மோகன் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த சுயவரலாறு புத்தகமான “மேக்கிங் எக்ஸலென்ஸ் ய ஹேபிட்’ (‘Making Excellence a Habit’) என்பதன் தமிழ் மொழியாக்கப் புத்தகமும் வெளியிடப்பட்டது. டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான டாக்டர். சுதா சேஷையன் அவர்கள் “எதிலும் சிறப்பு” என்ற தலைப்பிலான இந்த தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை சென்னை, வெங்கடேஷ்வரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனரும், பிரபல இதயவியல் மருத்துவருமான டாக்டர். சு. தில்லை வள்ளல் அவர்கள் பெற்றுக்கொண்டார். டாக்டர். வி. மோகன் அவர்களையும் மற்றும் நீரிழிவு சிகிச்சையில் அவர் வழங்கியிருக்கும் நிகரற்ற சேவையையும், பங்களிப்பையும் டாக்டர். சுதா சேஷையன் அவர்கள் புகழ்ந்து பாராட்டினார்.
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும், அதன் தலைமை நீரிழிவு மருத்துவருமான டாக்டர். வி. மோகன், இப்புத்தக வெளியீடு பற்றி கூறியதாவது: “இன்சுலின் உருவான வரலாறு, அதன் பயணம் மற்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் டொரண்டோவில் டாக்டர். ஃபிரெட்ரிக் பாண்டிங் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு கோடிக்கணக்கான மக்களின் உயிரை இந்த அற்புத மருந்து எப்படி காப்பாற்றியிருக்கிறது என்று விவரிக்கும் இப்புத்தகத்தை எழுதிவெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும் தருகிறது. மருத்துவத்துறையில் கால்பதித்து எனது தந்தையோடு இணைந்து, மருத்துவப் பணியை ஆற்றத் தொடங்கியதிலிருந்து, சமீப காலம்வரை நடந்த நிஜ நிகழ்வுகளின் விவரணையைப் இப்புத்தகத்தில் நான் வழங்கியிருக்கிறேன். இன்சுலினின் சிறப்பான பலன்களை இந்தியாவில் முதன் முறையாக ஆவணப்படுத்திய டாக்டர். J.B. போஸ் அவர்களது பங்களிப்புகளையும் நான் இம்முயற்சியில் கண்டறிந்திருக்கிறேன். இந்திய நீரிழிவியல் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய இவரது சேவைகள் உரிய அங்கீகாரமின்றி மறக்கப்பட்டுவிட்டன. நீரிழிவு சிகிச்சைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக செலவிட்டிருக்கும் எனக்கு இன்சுலின் எப்படி பல உயிர்களை காப்பாற்றியிருக்கிறது என்ற தகவல்கள் மட்டுமின்றி, முதலாம் வகை நீரிழிவின் காரணமாக இன்சுலினை சார்ந்திருக்கும் நபர்களின் வாழ்க்கையையும் எப்படி மாற்றியிருக்கிறது மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நிலை உள்ளவர்களின் வாழ்க்கை எத்தகைய மாற்றத்தைக் கண்டிருக்கிறது என்பதையும் நான் அறிவேன். இந்த உண்மை நிகழ்வுகள், அன்பையும், காருண்யத்தையும், கனிவையும் எடுத்துக்காட்டுவதோடு, பாகுபாடு, அவப்பெயர், உதாசீனம், வெறுப்பு மற்றும் உடல் மற்றும் மனவேதனை ஆகிய அம்சங்களையும் கோடிட்டுக் காட்டுகின்றன. முதலாம் வகை நீரிழிவால் அவதிப்படும் குழந்தைகள் மற்றும் வயது வந்த நபர்கள் மனதில் நம்பிக்கையையும், மனஉறுதியையும் வலுவாக இடம்பெறச் செய்வதே இப்புத்தகத்தின் நோக்கம். நீரிழிவு நிலையுள்ள நபர்கள் இப்புத்தகத்தை வாசிக்கும்போது, அவர்கள் தனித்து விடப்படவில்லை மற்றும் ஒரு பெரிய சமூகத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதை உறுதியாக உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”
“நீரிழிவு நிலையுள்ள நபர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் மற்றும் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் ஆர்வமூட்டுவதாக நிச்சயம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். “எதிலும் சிறப்பு” என்ற தலைப்பை தாங்கிய எனது சுய வரலாற்றுப் புத்தகம் தமிழில் வெளியாவதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்று டாக்டர். வி. மோகன் மேலும் கூறினார்.
‘Banting, Bose & Beyond’ என்ற இப்புத்தகம், நோஷன் பிரஸ் நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்டுள்ளது; நோஷன் பிரஸ் வலைதளத்திலும் மற்றும் அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட் மற்றும் பிற மின்-வர்த்தக தளங்களிலும் இப்புத்தகம் கிடைக்கிறது. மின் – வர்த்தக தளங்களில் இப்புத்தகத்தின் கிண்டில் பதிப்பும் கிடைக்கிறது. “எதிலும் சிறப்பு” என்ற தமிழ் புத்தகம் சைடெக பப்ளிகேஷன்ஸ் (இந்தியா) பி. லிமிடெட் ஆல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இப்புத்தகங்களைப் பெற முடியும். இப்புத்தகங்களை வாங்குவதற்கான இணைப்புகள் கீழ்வருமாறு:
Banting, Bose & Beyond - https://notionpress.com/login
அமேசான்: https://www.amazon.in/Banting-Bose-Beyond-Inspiring-Stories/dp/B09ZF8SL2P/
ஃபிலிப்கார்ட்:https://www.flipkart.com/banting-bose-beyond/p/itm8b9ec148b869d?pid=9798885304986&lid
 எதிலும் சிறப்பு - (Ethilum Sirappu) - https://scitechpublications.com/shop/recent/ethilum-sirappu/
புத்தகம் குறித்து: Banting, Bose and Beyond: முதலாம் வகை நீரிழிவு என்பது, இன்சுலினை கண்டிப்பாக சார்ந்திருக்கின்ற நீரிழிவின் ஒரு வடிவமாகும்; இது, மிகப்பொதுவாக குழந்தைகளை பாதிக்கிறது என்றாலும், எந்த வயதிலும் இது நிகழக்கூடும். கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் டாக்டர். பிரெடரிக் பாண்டிங் மற்றும் அவரது சகாக்களால் புதிய வரலாறு படைத்த இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட 1921 – ம் ஆண்டு வரை, முதலாம் வகை நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் ஒருசில மாதங்களே அல்லது அதிகபட்சமாக 1 அல்லது 2 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும். 1921 – ம் ஆண்டில் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டது, முதலாம் வகை நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கையையே முழுமையாக மாற்றிவிட்டது. எனினும், இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி மிகக் குறைவாகவே அறியப்பட்டிருக்கிறது. நீரிழிவு நிலையுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும், ஏன் அனைவருக்குமே இப்புத்தகம் சிறந்த வாசிப்பை தருகின்ற, ஆர்வமூட்டும் தகவல்களை நேர்த்தியாக தொகுத்து வழங்குகின்ற ஒரு புத்தகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாம் வகை நீரிழிவுடன் சாதனைகள் படைத்த சாதனையாளர்களின் உண்மை வாழ்க்கைக் கதைகள், நாட்பட்ட நோயுடன் வாழும் எந்தவொரு நபருக்கும் உத்வேகமும், நம்பிக்கையும் அளிப்பதாக இருக்கும். டாக்டர். வி. மோகன் அவர்களின் சிறப்பான, தனித்துவமான நடையில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தை வாசிப்பதை பாதியில் நிறுத்துவதென்பது இயலாததாகவே இருக்கும். சிறப்பான கதை சொல்லியாகத் திகழும் டாக்டர். மோகன் அவர்களின் இப்புத்தகமும், அவரது இலக்கிய சாதனைகள் மகுடத்தில் ஜொலிக்கும் மற்றுமொரு ரத்தினக் கல்லாக இருக்கும் என்பது நிச்சயம்.
எதிலும் சிறப்பு (Ethilum Sirappu) – நீரிழிவுடன் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இதுவரை கிடைத்திடாத நவீன, மருத்துவ சிகிச்சையை வழங்குவதில் சர்வதேச அளவில் கௌரவமும், அங்கீகாரமும் பெற்றிருக்கும் ஒரு சாதனையாளரான டாக்டர். வி. மோகன் அவர்களின் இந்த சுயவரலாற்றுப் புத்தகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. நீரிழிவு கண்காட்சியை நடத்த திட்டமிடுதல் அல்லது நாடு முழுவதும் நீரிழிவு குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற டாக்டர். வி. மோகன் அவர்களின் வழக்கத்திற்கு மாறான மற்றும் தைரியமான நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் டாக்டர். வி. மோகன் அவர்களுக்கே உரிய தனித்துவமான, எளிய ஆனால், இனிய நடையில் இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் ஆசிரியர் குறித்து:டாக்டர். வி. மோகன் அவர்கள், இந்தியாவில் 8 மாநிலங்களில், 32 நகரங்களில், 50 மையங்களின் வழியாக 5,00,000 நபர்களுக்கு நீரிழிவுக்கான சிகிச்சையை வழங்கிய அனுபவத்தைக் கொண்ட இந்தியாவின் முன்னணி நீரிழிவியல் நிபுணராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதால் கௌரவிக்கப்பட்டிருக்கும் டாக்டர் வி. மோகன், நீரிழிவியல் துறையில் அவரது பணி மற்றும் ஆராய்ச்சிக்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். டாக்டர். பி. சி. ராய் விருது (இந்திய மருத்துவ கவுன்சில்), டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் நூற்றாண்டு விருது (ICMR) ஆகியவை இவற்றுள் சிலவாகும்.